புத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?
அது அப்படியல்ல!
அறிவு மிகுந்தவர்களின் அறிவு கூர்மையாக இருக்கும். அதன் விளைவாக, அவர்கள் அதிகம் கவனிப்பார்கள்.
அவர்களின் கவனிப்புகளைத் தேவையான இடங்களில் வெளிப்படுத்தவும் அவர்கள் அதிகமாகப் பேசவும் வேண்டியிருக்கும்.
ஆனால், அவர்களை அடையாளம் காண ஒரே ஒரு வழிதான்; அஃது அவர்களின் கவனிக்கும் திறம்.
கவனிப்பதால் அவர்கள் அதிகப் பலனை அடைகிறார்கள். அதிகம் உட்கிரகிக்கிறார்கள். சூழலையும் மனிதர்களையும் முழுதும் விளங்கிக்கொண்டு, உள்வாங்கிக் கொண்டால் சரியான முடிவினை எடுக்க முடியும். அப்படி முடிவு எட்டிய பின்னர் பேசுவதாலும் அல்லது செயல்படுவதாலுமே அவர்கள் அதிகம் பேசுவதில்லை என்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
ஏன் அப்துல்கலாமே பலமுறை மாணவர்களுடனும் சிலமுறை குழந்தைகளிடம் உரையாடும் போது அதிகமாக சிரித்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார். அதனால் அவர் அறிவாளி இல்லையா?
அறிவுக் கூர்மையானவர்கள் அதிகம் கவனிப்பார்கள். குறைகுடம் தளும்பும் என்பது பிதற்றல் என்று ஒரே வகையைக் குறிக்க மட்டுமே. அதை அறிவாளிகளுக்கும் பொருத்துவது அபத்தம்! அறிவாளிகளும் சில சமயம் அதிகமாகப் பேசலாம்.
பிறகு அறிவாளிகளின் அறிவு எப்படித்தான் வெளி உலகினுக்கு வெளிப்படும்!
அதிகம் காதுகளுக்கு வேலை கொடுப்பார்கள். அதிக நேரம் கவனித்துத் திட்டமிட்டு பேசுவார்கள். தெளிவான முடிவினை எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறான விளைவுகள் கூடத்தரலாம். ஆனால், அவர்களே அறிவாளிகள்.
அவர்கள் எதிர் இருப்போரை முழுமையாகப் பேசவிடுவார்கள். சிந்தனைத் திறம் தான் ஒருவர் அறிவாளியா எனத் தீர்மானிக்க வைக்கும் அளவீடு.
அப்படித்தான் மருத்துவர்கள் குறுக்கிடாமல், நோயாளியை முழுமையாகப் பேசி முடிக்கும் வரை கவனித்தால் தான் சரியான முடிவு எடுக்க முடியும்.
ஒரு நல்ல வழக்குரைஞர் எதிராளியை முழுமையாகப் பேச வைத்து கவனிக்க வேண்டும்.
அப்படித்தான் அறிவாளிகளும்.
முழுமையான தகவல்களே சரியான முடிவுகளை எட்டும் ஆயுதம்.
அதுவே அறிவாளிகளின் நோக்கமும்!
Comments
Post a Comment