விலைகுறைப்பு
ஒரு முட்டாள்கள் தேசத்து மாமன்னனின் தொழிலதிபர் நண்பர்கள், " நாங்கள் தயாரிக்கும் ரொட்டியின் விலையை 15 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்த வேண்டும் " என கோரிக்கை வைத்தார்கள்.
***யோசித்த மன்னன், "சரி.. ₹ 50 என்று உயர்த்திக் கொள்ளுங்கள் " என்றார்.
***அதைக் கேட்ட தொழிலதிபர்கள், "வேண்டாம் மன்னா.. மக்கள் அவதிப் படுவார்கள் .." என்று சொல்லிப் பார்த்தார்கள்.
***மன்னன் கேட்கவில்லை - அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.
***ரொட்டி விலை உயர்ந்தது ..
மக்கள் திண்டாடினார்கள் .. மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.
***மக்கள் குறையை கனிவுடன் கேட்ட மன்னன், அனைத்து ரொட்டி தயாரிப்பாளர்களையும் அடுத்த நாளே அரண்மனைக்கு வர உத்தரவிட்டான்.
***என்ன முடிவாகுமோ என கவலையுடன் காத்திருந்தனர் மக்கள் - அரண்மனைக்கு வெளியே ..
***கூட்டம் முடிந்தது ..
அனைவரும் வெளியே வந்தனர்.
***வந்தவர்களை சூழ்ந்து கொண்ட மக்கள், என்னவாயிற்று என பதட்டத்துடன் கேட்க -
***"உங்கள் நலனை கருத்தில் கொண்டு, ரொட்டி விலையை ₹ 30 க்கு குறைக்க மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
***அதிலும் 5 ரூபாய் அவர் தரப்பில் எங்களுக்கு தருவதாக சொல்லி - மக்களிடம் 25 ரூபாய்க்கு ரொட்டியை விற்கச் சொல்லியுள்ளார் என அவர்கள் கூறியதை கேட்டு -
*மன்னனை வாழ்த்தி கோஷம் போட்டார்கள் மக்கள்*
Comments
Post a Comment