Posts

Showing posts from October, 2019

ஆன்லைன் மூலம் செக்கு எண்ணெய் பிசினஸ்

Image
``புதுமையும், சரியான திட்டமிடலும் இருந்தால் போதும் எந்த புது முயற்சியிலும் வெற்றி பெறலாம்" எனத் தன்னம்பிக்கை பொங்கப்  பேசும் காயத்ரி, ஆன்லைன் வர்த்தகம் மூலமாக மரச்செக்கு எண்ணெய், வடகம், மசால் பொடி வகைகள், ஊறுகாய் போன்ற ஹோம் மேட் பொருள்களை விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய புதுமையான முயற்சியினால் பல வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் காயத்ரி தன் சக்சஸ் சீக்ரெட் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``எனக்குச் சொந்த ஊர் சேலம். படிப்பு முடிந்ததும் திருமணமாகி கணவருடன் துபாயில் செட்டில் ஆனேன். குடும்பம், குழந்தை என சராசரி வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் என்றாலும், சராசரி பெண்ணாக வாழ்க்கையை நகர்த்துவதில் எனக்கு விருப்பமில்லை. அதைத் தாண்டி வரவேண்டும் என்ற என் நினைப்புதான் `ஸ்ம்ரித்திகா' என்ற பெயரில் ஆன்லைன் பிசினஸாக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது. ``என்னுடைய சின்ன வயதில், எங்கள் ஊர் முழுவதும் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் துணி வியாபாரம், பாத்திர வியாபாரம், எண்ணெய் வியாபாரம் என்று அந

வீட்டில் இருந்தபடியே செய்யலாம் ஆன்லைன் பிசினஸ்!

Image
ஒ ரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் வீடு, கணவர், குழந்தை என ஈடுகொடுக்க முடியாமல் அந்த ஓட்டத்தில் நைந்துபோகும் பெண்களின் வலி துயரமானது. ஆனால், பெண் சுயதொழில் முனைவோர்களில் பலர், ‘வீட்டையும் பார்த்துக்கிட்டே தொழிலையும் பார்த்துக்க முடியும்’ என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தேன்’ என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான், ஆன்லைன் பிசினஸ் வெற்றியாளரான சென்னையைச் சேர்ந்த பிரியா பார்த்தசாரதி. வீட்டில் இருந்தபடியே பல ஆண்டுகளாக ஆன்லைனில் ஃபேஷன் ஜுவல்லரி பிசினஸ் செய்துவந்தவர், இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஆன்லைன் கன்சல்டன்ஸி பணியைச் செய்து வருகிறார். ‘`வீட்டில் இருந்து சின்னதாவோ, பெரிய அளவுலயோ சுயதொழில் செய்றப்போ, நமக்கு நாமதான் முதலாளி. ஒரு நிறுவனத்துல எவ்வளவு உழைச்சாலும் சம்பள விஷயத்துல பெண்கள் எதிர் கொள்ற பாலினப் பாகுபாடு, அளவுக்கு அதிக வேலை, ஸ்ட்ரெஸ், நைட் ஷிஃப்ட், மேனேஜர் திட்டு, டிராஃபிக் டென்ஷன் கள், காலையில் அரக்கப்பரக்கக் கிளம்பி இரவு சோர்ந்துபோய் வீடு திரும்புறது, வீட்டுக்கு வந்த பின்னாடியும் நமக்காகக் காத்திருக்கும் வேலைகள்... இந்தத் துயரங்களில் இருந்தெல்லாம் விடு

படிச்சுக்கிட்டே ஆன்லைன் பிசினஸ்!

Image
ஹாய்!  நான் நிவேதா. சென்னை, எஸ்.எஸ்.என் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் பொண்ணு. சொந்த ஊரு தஞ்சாவூர். சென்னையில சில ஆர்ட் கேலரிகளில் எங்க தஞ்சாவூர் பெயின்ட்டிங்ஸ் பிரைஸ் டேக் பார்த்தா... ஸோ காஸ்ட்லி. ஆனா, எங்க ஊருல ஆர்ட்டிஸ்ட்ஸ் அதை கம்மியான விலைக்கு வித்து வாழ்க்கையை ஓட்டுறாங்க. எனக்கு ஒரு ஸ்பார்க். டெக்னாலஜி மூளையை லைட்டா தட்டிவிட்டேன். ‘www.theartcompany.in’னு வெப்சைட் ஆரம்பிச்சு, தஞ்சை ஓவியங்களை எங்க ஊரு ஆர்ட்டிஸ்ட்ஸ்கிட்ட நேரடியா வாங்கி, ஆன்லைன்ல சேல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு மட்டுமில்ல... ஆர்ட்டிஸ்ட்ஸ், கஸ்டமர்ஸ்னு எல்லா தரப்புக்கும் நியாயமான லாபம். இப்ப நான் படிச்சிக்கிட்டே சம்பாதிக்கிற சமர்த்துப் பொண்ணு! என் காலேஜ் ஃப்ரெண்ட், தன் அக்காவோட கல்யாணத்துக்காக கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சல் ஆடுற பெயின்ட்டிங்கை ஆர்டர் பண்ணினா. அந்தப் பணத்தை பொக்கிஷமா வெச்சிருக்கேன்! கஸ்டமர்கள்,  குறிப்பா மணமக்கள் அவங்களோட போட்டோஸ் அனுப்பி பெயின்ட்டிங்கா வரைஞ்சு வாங்கும் ஆர்டர்கள் நிறைய வருது. அந்த பெயின்ட்டிங்ஸை என் வெப்சைட்டில் அப்லோடு பண்ண,