செந்தில் என்பது தமிழ் சொல்லா?
பொருளில்லாச் சொல்லெதுவும் தமிழில் இல்லை. பொருளில்லை என்றால் அச்சொல் தமிலில்லை - என்னும் தொல்காப்பியன் வாக்கின் அடிப்படையில்
முதலில் — செந்தில் உள் என்ன இருக்கிறது பார்ப்போம்
செந்தில் = செந்து + இல் எனப்பிரியும்
செந்து = அணு
இல்= இல்லை, இல்லாமை, இன்மை
முழுச்சொல்லுக்கு = அணு இல்லாத , அணு இல்லாமல் உருவான என்று பொருள்வரும்
இங்கு ,
முருகனின் பிறப்புப் பற்றியக் குறிப்பு ஒன்று : சிவனின் நெற்றிக்கண் நெருப்பு, சரவணப் பொய்கையில் விழுந்து உருவானவன் ., உலகின் பொதுவான , பிறப்பு இலகணம் போல, அணுக்களால் உருவாகாமல் , நெருப்பில் கருவாகி, நீரில் பிறந்தவன், பிற பிறப்புகள் போல அணுக்கள் இல்லாதவன் முருகன்.,
இப்பொழுது செந்தில் - என்றால்
செந்து + இல் = அணு + இல்லாதவன் = அணுவில்லாதவன், உடலில் அணுக்கள் இல்லாதவன், (பிற பிறப்புகள் போல் இல்லாமல்) அணுவின்றிப் பிறந்தவன் என்று பொருளாகிறது
அடுத்து செந்தூர் — க்கு வருவோம்
திரு + செந்து + ஊர் = திருச்செந்தூர்
செந்து = ஓசை, பண்
சொல்லின் பொருள் = சிறந்த ஓசை எழும்பும், கேட்கும் ஊர் என்று பொருள் வரும்
இங்கு, திருச்செந்தூர் கோவிலைப் பற்றிய செய்தி ஒன்று :
கருவறையில் இருக்கும் முருகனுக்கு நேர் எதிரில், கொடிமரத்தை அடுத்துள்ள கோவிலின் வெளிப்பிரகார சுற்றுச்சுவரில், வெளியிருக்கும் கிழக்குக்கடல் தெரியும் அளவுக்கு, ஒரு துளை / ஓட்டை இருக்கும் ., , ,அதன்வழியே வெளிருக்கும் வளி (காற்று) கடல் அலையின் ஆரவாரத்தைச் சுமந்து கொண்டு கோவிலுன் உள் நுழையும் ., அதில் ஒருந்து ஓம் என்னும் ஓசை, அலையடிக்கும் போதெல்லாம் கேட்கும், கேட்டுக் கொண்டே இருக்கும் . ( கோவிலுக்கு வரும் அடியவர் ஒவ்வொருவரும் அத்துளையில் காதை வைத்து கேட்பார்கள்)
இப்பொழுது செந்தூர்- ஐப் பார்ப்போம்
திருச்செந்தூர் என்றால் ஓம் என்னும் ஓசை / மந்திரம் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஊர் ஆகும் .
இப்பொழுது மூலக் கேள்விக்கு வருவோம் ..
செந்தில் என்பது தமிழ் சொல்லா?
எனக்குத் தெரியவில்லை . அறிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன் !
பின்குறிப்பு : செ என்று ஒரு எழுத்தையும், செந் , என்று இரு எழுத்தையும் வைத்துக்கொண்டு செந்திலும், செந்தூரும் ஒன்றுதான் என்னும் நிறுவல்களும் உண்டு .
மெய் ஆய்ந்து, தொடர்புகளைப் புரிந்து சரியானதைச் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு .
Comments
Post a Comment