வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன!_
*வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,*
1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2.வரையறுக்கப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை
*1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி:*
நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.
மின்சார பல்பைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனைச் சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது ‘வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது.
*2. வரையறுக்கப்பட்ட இலக்கு:*
தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.
‘குறிக்கோள்’ அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம், ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.
*3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:*
நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத் தான் குறை சொல்கிறோம்.
இது தவறில்லை என்று சிலருக்குத் தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.
ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.
சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால், அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று. மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.
*4. சரியான கண்ணோட்டம்:*
நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது.
அந்தப் பயணத்தைத் தொடங்கும் போதும், பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம்.
எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும்.
இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்
*5. தன் மீதான முழு நம்பிக்கை:*
வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள்.
‘நம்மால் முடியும்’ என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்.
Comments
Post a Comment