வரலாற்றில் இன்று-[ 27 மே 2022]

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம் - 1964


நைஜிரியா குழந்தைகள் தினம்


நேரு நினைவு தினம்








இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார் . இவர் பண்டிட் நேரு , பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார் . நேரு நவம்பர் 14, 1889 இல் பிறந்து மே 27, 1964 இல் இறந்தார் . இவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படுகிறது . இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக நேரு செயல்பட்டார் . வெள்ளையனே வெளியேறு இயக்கம் , ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார் . அவர் வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளார் . உலக வரலாற்றின் காட்சிகள் , சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் ஆகிய நூல்களை எழுதினார் . இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்டு 15, 1947 இல் புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச்சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது . இவர் உலக அமைதிக்காகவும் பாடுபட்டார் .

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை