நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க முடியும்….
புத்தர் ஒருமுறை தமது மேலாடையில் நிறைய முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போனார். முடிவில் துணியே முடிச்சுகளின் மூட்டையாகிவிட்டது.
"முன்போல் துணியை எப்படி ஆக்குவது” என்று சீடர்களைக் கேட்டதும் அவர்கள் திணறினார்கள்.
“நான் கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும்" என்று கூறியபடி வரிசையாக அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்து மறுபடியும் மேலாடையாக்கினார். “நான் போட்ட முடிச்சுகளை நீங்கள் பிரிப்பது கஷ்டம். ஆனால் நானே பிரிப்பது வெகுசுலபம். ஏனென்றால் எதை அடுத்து எது போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும் இப்படியே உங்கள் மனத்தில் விழுந்த கவலை முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம் பிறர் பிரித்துததரவேண்டும் என்று எதிர் பார்ப்பது கடினம்" என்றார்.
இன்று பலரும் தங்கள் கஷ்டங்களை வெளியில் இருந்து யாராவது தீர்த்து விட மாட்டார்களா என்று தவிக்கிறார்கள். ஜோதிடர்கள், குறி சொல்லிகள், விளம்பர வெளிச்ச சாமியார் கம்பெனிகள், தாயத்து முதல் தகுடுகள் வரை தந்து மனிதர்களை அடகு பிடித்து விற்பனைக்கு வைக்கும் மந்திர மனிதர்கள் இப்படி யாரிடமாவது போய்ப் பணம், நேரம், ஏன் தன்னையே தொலைக்கின்றார்கள்.
ஆனால் நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க முடியும் என்று கடைசி வரை உணர்வதே இல்லை!
Comments
Post a Comment