பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு.....

பிடித்த பேச்சாளர் - ஒரு அரசியல்வாதி 

பிடித்த இயக்குனர் - பல படங்களில் திருடி படமெடுக்கும் ஒரு இளம்  இயக்குனர்

பிடித்த இசையமைப்பாளர் - பத்து நாள்களில் மறந்து போகும் பாடல்களுக்கு சொந்தக்காரர் 

பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்


பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்

பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்

பிடித்த சொல் - மொக்கை

பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்



படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. 


காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

விழுமியங்களே (சுயசிந்தனை, பண்பாடு) தேவையில்லை, 

சாதி, மதம்தான் எல்லாம்...




சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..

பெண்கள் மீது மரியாதையே இல்லை..

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..




ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..

ஒரு நாளில் ஒரு வரி கூட வாசிப்பதில்லை..

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்லவோ எழுதவோ வராது..


பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..

வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..


எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..




ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, 

காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, 

எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....




இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..




பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..

பெற்றோர்கள் சுத்தம்; அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..

கடந்த ஐந்தாண்டுகளில் மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்‌‌..


மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். 

இது இருபாலருக்கும் பொருந்தும்.


நான் பேசுவது 2k kids ன் பொதுமனநிலை குறித்துதான்.. 

விதிவிலக்குகளை அல்ல.. 

பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் 

தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.



காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள். 

எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.


கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. 


பயமாக இருக்கிறது...இன்றைய தலைமுறையின் போக்கு.....

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY