ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

 எனது செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது.


எனது வங்கி கணக்கில் நாற்பத்தி எட்டாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட செய்தி அது.


யூடியூபில் இருந்து கடந்த மாதம் நான் சம்பாதித்த தொகை.


எனது ஒட்டுமொத்த வங்கி கணக்கு இருப்பு 5 லட்சத்தை தாண்டி இருந்தது.


சரியாக எனது யூடியூப் சேனலை ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது.


கடந்த வருடம் இந்த மாதம் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று நினைத்து பார்க்கிறேன்.


ஒரு தனியார் நர்சரி பள்ளிக்கு வேலை கேட்டு சென்றேன்.


சரியாக காலை 9 மணிக்கு வரும்படி சொல்லி இருந்தார்கள்.


சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலையில் சாப்பிடக் கூட இல்லை.


பள்ளிக்குச் சென்று தாளாளர் அறைக்கு முன் காத்திருந்தேன்.


நேரம் சென்று கொண்டே இருந்தது.


நிறைய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அட்மிஷன் போடுவதற்காக வந்துகொண்டே இருந்தனர்.


ஒரு கட்டத்தில் உட்காருவதற்கு இடம் இல்லாமல் பெற்றோர்களின் நின்று கொண்டிருக்கும்போது நான் அமர்ந்து இருந்ததை தலைமை ஆசிரியை பார்த்துக்கொண்டே சென்றார்.


நான் எழுந்து ஒரு பெற்றோருக்கு இடம் கொடுத்தேன்.


மணி 12 ஆனது.


வயிறு பசித்தது.


கால் வலித்தது.


ஒருவழியாக என்னை உள்ளே அழைத்தனர்.


சம்பிரதாய கேள்வி களுக்குப் பிறகு சம்பளம் பற்றி பேசினோம்.


மாதம் 4,800 ரூபாய் சம்பளம் என்று முடிவானது.


மிகக் குறைந்த சம்பளம்தான்.


வீட்டில் சும்மா இருப்பதற்கு இதுவாவது கிடைக்கிறது என்ற முடிவோடு வேலைக்குச் சேர்ந்தேன்.


வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் கவிதாவை சந்தித்தேன்.


கவிதா ஒரு இணையதள வடிவமைப்பாளர்.


எங்கள் பள்ளிக்கு இணைய தளத்தை வடிவமைத்து கொண்டிருந்தார்.


மதிய நேரம் இருவரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவோம்.


ஒரு வாரத்தில் இருவரும் நன்றாக பழகினோம்.


எனது குடும்ப சூழல் பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவள் கொடுத்த ஐடியாதான் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்பது.


அதுவரை யூட்யூபில் பொழுதுபோக்காக நேரத்தை கழித்துக் கொண்டிருந்த எனக்கு இது புதிதாக தெரிந்தது.


கவிதா கொடுத்த ஊக்கத்தின் காரணமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து முதல் வீடியோவை பதிவேற்றம் செய்தேன்.


யாரும் பார்க்கவில்லை.


சுமார் ஒரு வாரம் வரை எனது வீடியோவுக்கு ஒரு வியூ கூட வரவில்லை.


வெறுத்துப் போனேன்.


தற்செயலாக கவிதா என்னை தொடர்பு கொண்டபோது யூடியூப் சேனல் நிலை பற்றிச் சொன்னேன்.


கவிதா பல்வேறு ஆலோசனைகளை கொடுத்தாள்.


அவளது ஆலோசனைப்படி தினம் தினம் வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்தேன்.


அவளின் ஆலோசனைப்படி சமூக வலைத்தளங்களில் கணக்குகள் ஆரம்பித்து வீடியோக்களை முறைப்படி மார்க்கெட்டிங் செய்தேன்.


ஒரு மாதத்தில் எனது சேனல் பணம் சம்பாதிக்க தகுதியானது.


மூன்று மாதம் கழித்து நான் எனது வேலையை விட்டுவிட்டு முழு நேர யூடியூபர் ஆக மாறினேன்.


ஏனென்றால் பள்ளியில் எனக்கு கிடைக்கும் ஒரு வருட சம்பளத்தை நான் இரண்டே மாதங்களில் பெற்று விட்டேன்.


எனக்கு இந்த வாய்ப்பை சொல்லிக்கொடுத்த கவிதாவிற்கு ஒரு சின்ன பார்ட்டி வைத்தேன்.


நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.


கவிதாவின் இன்னொரு ஆலோசனை என்னை அசர வைத்தது.


அவளது ஆலோசனைகள் உடனடியாக செயல்படுத்த துவங்கினேன்.


அந்த ஆலோசனை என்னவென்றால் ஆன்லைன் மூலமாக டியூசன் எடுப்பது.


எனது யூடியூப் சேனலில் இது பற்றி நானே விளம்பரம் பண்ணும்போது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் டியூசனுக்கு சேர்ந்தனர்.


Zoom மூலம் நான் எடுக்கும் டியூஷன் மூலமாக எனக்கு இன்னும் வருவாய் பெருகியது.


எனக்கு சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் மிகுதி.


பள்ளிக்குச் செல்வதை விட டியூஷன் எடுக்கவே அதிகமாக விரும்பினேன் என்பது உண்மை.


எனது டியூசன் மாணவர்கள் மூலமாக மேலும் பலர் எனது ஆன்லைன் வகுப்பில் இணைந்தனர்.


வருமானம் பல்கிப் பெருகியது.


கடந்த வருடம் இதே மாதம் என் கையில் பத்து ரூபாய்கூட இல்லை. ஆனால் இன்று என் கையில் இருப்பது ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல்.


முழுக்க முழுக்க யூடியூப் மூலமாகவும், டியூஷன் மூலமாகவும் கிடைத்த வருமானம் இது.


கவிதா மட்டும் இந்த வழியை சொல்லிக்கொடுத்து இருக்காவிட்டால் நான் இன்றும் 4800 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருப்பேன்.


இப்போது..


எனது அப்பாவிற்கு தரமான மருத்துவ சிகிச்சை கொடுக்க முடிகிறது.


என் அம்மாவின் வாழ்நாள் கனவான நெக்லஸ் ஒன்றை சமீபத்தில் வாங்கி கொடுத்தேன்.


நான் ஏழை என்ற காரணத்திற்காக, என் குடும்பத்தால் வரதட்சனை கொடுக்க முடியாது என்ற காரணத்திற்காக, என்னை நிராகரித்த நபர்கள் ஏராளம்.


அவர்களில் ஒரு சிலரை நான் அவ்வப்போது எங்கேயாவது பார்க்க நேரிடுகிறது.


அப்படிப் பார்க்கும் போதெல்லாம் அவர்களைவிட பொருளாதார ரீதியாக நான் நன்றாக இருக்கிறேன் என்பது எனக்கு அப்பட்டமாக தெரிகிறது.


அப்படிப்பட்ட ஒருவன் சமீபத்தில் என் கண்ணில் பட்டான்.


அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தது.


ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டான்.


எங்களால் கொடுக்க முடியவில்லை.


பேருந்து நிறுத்தத்தில் மனைவியுடன் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.


நான் சமீபத்தில் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்லும்போது தற்செயலாக அவனை பார்த்தேன்.


அவனும் என்னை பார்த்தான்.


எனது ஸ்கூட்டரையும் பார்த்தான்.


அவன் முகம் அவமானத்தால் சுருங்கிப் போனது.


நான் தன்னம்பிக்கை கலந்த திமிருடன் அவனை பார்த்தேன்.


எனது கண்களை நேரடியாக சந்திக்க முடியாமல் திரும்பிக்கொண்டான்..


என்னைப்போலவே நீங்களும் உங்கள் திறமையை சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள், பொருளாதாரத் தன்னிறைவு பெருங்கள்.


பொருளாதார உதவிக்காக யாரையும், எப்போதும் நம்பி இருக்க வேண்டாம், அது கணவனாக இருந்தாலும் சரி, அப்பாவாக இருந்தாலும் சரி, சகோதரனாக இருந்தாலும் சரி..





Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ