Posts

Showing posts from February, 2015

Always think positive

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந் தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை... இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன... அப்போது, மிகப் பெரிய சப்தம்... திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர... பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்து

Knowledge Management

ஒரு நிகழ்ச்சியில் விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் விவேகானந்தர். அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு விவேகானந்தர் உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டுவிடேன் என்றார். இன்று முதல் நான் உங்களை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்.. இதுதான் அறிவின் முதிர்ச்சி..... ஒருவரது கருத்தை மறுக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு என்பது இது தான்..