வரலாற்றில் இன்று-[ 22 மே 2022]

 இலங்கை குடியரசு தினம் - 1972



ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர் - 1906




உலக பல்லுயிர் பெருக்க தினம்


மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்



மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் நாதா நகர் கிராமத்தில் மே 22, 1722 இல் ராஜாராம் மோகன் ராய் பிறந்தார் . இந்தியாவின் விடிவெள்ளி , புதிய இந்தியாவை நிறுவியவர் , புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என இவரைப் புகழ்கின்றனர் . மூடநம்பிக்கைக்கும் , ஏனைய தீமைக்கும் எதிராக குரல் எழுப்பினார் . அனைத்து மக்களும் , சாதி , சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என வலியுறுத்தினார் . பெண்கள் உரிமைக்காகவும் , விதவைகள் மறுமண உரிமைக்காகவும் , பெண்களின் சொத்து உரிமைக்காகவும் பாடுபட்டார் . பெண்களுக்கு கட்டாயக் கல்வி முறையை பெரிதும் ஆதரித்தார் . உடன்கட்டை ஏறல் ( சதி ) என்ற கொடுமையை ஒழிக்க பாடுபட்டார் . இதனால் 1833 இல் ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி அதன் மூலம் சதி முறையை ஒழித்தார் . ராஜாராம் செப்டம்பர் 27, 1833 இல் இயற்கை எய்தினார் .


Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ