அணுகுமுறை என்றால் என்ன?

 ஒரு விளம்பரம் குறும்படம்.


பத்து செகண்ட்தான். ஒரு பெண் மாடல் மேடையில் நடந்து வருகிறாள். மிகவும் அழகு. பொம்மை போல. அவள் தான் வெற்றி பெறுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.


துரதிருஷ்டவசமாக,பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள்.


மொத்த பார்வையாளர்களும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள். அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது. ஒரே ஒரு செகண்ட்தான். தன் கையை தானே மகிழ்ச்சியாக தட்டிக் கொண்டாள்,,


மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள்.


பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு.


இது தான் ஒரு பிரச்னை வரும் போது நம் அணுகுமுறை. கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே விடாமுயற்சி.


சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது.


அப்பா இறந்து இரண்டு நாள்தான். அஸ்தி கூட கரைக்கவில்லை. ஆட வேண்டிய நிர்ப்பந்தம். சென்றவர் சதம் அடித்தார். செஞ்சுரி அடித்த பிறகு, மெல்ல ஹெல்மெட்டை கழற்றி விட்டு, வானத்தை நோக்கி கண்ணீர் மல்க பேட்டை நீட்டினார்.


தந்தைக்கு சமர்ப்பணம். உண்மையான அஞ்சலி.


எந்த இடர் வரினும் இலக்கு நோக்கி ஓட வேண்டும் என்ற அணுகுமுறை நிச்சயம் வெல்லும்.‌.!!!

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ