Posts

Showing posts from August, 2018

வாய்ப்பு - நீதிக்கதை

நீதிக்கதை ஒரு மரத்தடி. பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் ........ அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள். அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான். ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது. ‘நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்....!' என்றான் அரசன். மகிழ்ந்து போனான் பார்வையற்றவன். ‘அரசே. ! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா.....?' என்று கேட்டான். ‘இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்', என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான். மதிய உணவை அரசன் கொண்டு வருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும்.ஆவலோடு காத்திருந்தான். அடுத்த நாள் வ

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை இந்த இணையம், மொபைல், செயலிகள், டிஜிட்டல் கருவிகள் எல்லாமே எந்நேரமும் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆம். என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விடுத்து இவற்றைப் பார்க்கச் செய்வதே இவற்றின் வேலை. சமீபத்திய நரம்பியல் ஆய்வுகள் இவற்றின் மூலக்காரணங்களை ஆய்ந்து வெளியிட்டுள்ளன. 1. புதுத்தகவல்கள் மூளையில் டோபோமைன் எனும் வேதிப்பொருளை அளிக்கின்றன. இது மனத்திற்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. 2. மேலும் மேலும் மகிழ்ச்சி கிடைக்க அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக புதுத் தகவல்கள் வேண்டும். 3. தொடர்ந்து புதுத்தகவல்கள் அளிக்கும் டிஜிட்டல் கருவிகள் மேலும் மேலும் டோபோமைனைது தூண்டி நம்மை ஒரு போதைக்கு அடிமையாக்கி விடுகின்றன. ஒவ்வொரு புது மின்னஞ்சலும், புது ட்வீட், புது முகநூல் செய்தியும் கொஞ்சம் டோபோமைன் தருகின்றன. உற்சாகமாக உணர்கிறோம். விரைவில் இது பழகி விடுகிறது. அதிக மகிழ்ச்சிக்கு அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக செய்திகள் வேண்டும். நிமிடத்துக்கு ஒரு முறை மின்னஞ்சல், டோபோமைன், டுவிட்டர், டோபோமைன், முகநூல், டோபோமைன். இது ஒ