படித்ததில் வலித்தது.-- பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!!
“எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே? அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியதுதானே! பெரியவர் கேர்ள்ஸ்னா காசு கேக்க மாட்டார். சரியான ஜொள்ளு பார்ட்டி!”
“சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்... நீ பாக்கறதுக்கு அப்படியே தமன்னாவாட்டம் பளபளனு இருக்கே. உன் காலைப் பார்த்துக்கிட்டே மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!’’”
இப்படி அழுத்தம் கொடுக்க வேறு வழியின்றி, அந்த தமன்னா பெரியவரிடம் போக, செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார்.
தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்று கேட்டாள்.
‘‘என்னம்மா இது? உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு! கிளம்பு’’ என்றார் பெரியவர்.
பக்கத்தில் நின்ற தோழி அவள் காதில் ‘‘பாத்தியாடி? நான் சொல்லலை... பெருசு ஜொள்ளு பார்ட்டி!’’ என்று கிசுகிசுத்தாள் .
‘‘உஷ்...’’ என அவளை அதட்டிவிட்டு தமன்னா ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள்.
‘‘எடுத்துக்கங்க. இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது. கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும். அப்பத்தானே உங்க பெண்ணைக் காலேஜ்ல படிக்க வைக்க முடியும்? நம்ம பொண்ணு கூட காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்கதானேனு ஒரு பிரியத்தில யாருக்கும் ஓசில தச்சுக் குடுக்காதீங்க அப்பா!’’ என்றாள் அவள் கண்ணீருடன்.
இந்த உலகில் நாம் செய்யும் உதவி, சிலருக்கு ஏளனமாக தெரியலாம், தேவையானவர்களுக்கு மட்டுமே உதவுவோம், தேவையற்றவர்களுக்கு அல்ல... நன்றியும் இருக்காது!!!! கெட்ட புத்தி தான் இருக்கும்.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!!
Comments
Post a Comment