Posts

Showing posts from May, 2022

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்

 1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்... 2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்... 3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிப்போனது... 4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது... 5. சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது... 6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...   7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்... 8. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்... 9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,  பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்... 10. தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் ...

அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்

 வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது?* *1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.* சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.* அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,* கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.* அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.* சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.* சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.* சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.* 1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.* 2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.* அன்று வாழ்ந...

தெளிவான மனநிலை என்பது!!!

 அதிக மகிழ்ச்சியோ… அதிக துக்கமோ இன்றி சரி எது தவறு எது என்பதை தன்னுடைய உணர்வால்… தன்னுடைய அறிவால் அறிந்து தன்னுடைய உணர்ச்சிகளை ஓரம் கட்டி பிடித்தவர் பிடிக்காதவர் என்ற பாரபட்சம் இன்றி நடுநிலையில் எடுக்கும் மனநிலை.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க​ பெண்களுக்கான​ தொழில் | House Wife Work From Home Business Ideas Tamil

 பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள்து குழந்தைகள் மற்றும் தங்கள்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் மேலும் குடும்ப​ சூழ்நிலைக்காரணமாக​ வேலைக்கு செல்ல முடியாத​ சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படும்.​ குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பெரும்பாலான​ பெண்களுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாரிக்க​ வேண்டும் என்ற​ ஆர்வம் இருக்கும். இது மாதிரி வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாரிக்க​ விரும்பும் இல்லதரசிகளுக்கான​ பல தொழில்கள் இருக்கு அவற்றில் சில​ எளிமையான​ முறையில் உங்க​ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களை பார்க்கலாம். 1.Work From Home Virtual Assistant Job வேலையின் விவரங்கள் Virtual Assistant) விர்சுவல் அசிஸ்ட்டென்ட் வேலை என்பது அதிக​ நிறுவனத்தில் - போன் கால் கஸ்டமர் சர்விஸ், போன் அட்டன் பன்னுவது, அப்பாய்மெண்ட் பிக்ஸ் பன்றது, கஸ்டமர் பீட் பேக் கால் அட்டன் பன்றது, இது மாதிரி நரைய​ சேவைகள் இதில் அடங்கும். இந்த​ வேலையை நீங்கள் செய்வதற்க்கு ஒரு ஆண்ட்ராய்ட் முபைல் போன் மற்றும் தேவைப்பட்டால் உங்களிடம் ஒரு மடிக்கனினியாவது இருக்க​ வேண்டும். இதற்க்கான​ கல்வித் தகுதிகள் ...

உழைக்காமல் முன்னேற முடியாது

 அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள், கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் சாமிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள், இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா…? தயவுசெய்து வெளியே வாருங்கள்.. உழைக்காமல் முன்னேற முடியாது. உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் பேச்சு அளவில் மட்டும் கூறிக் கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது. அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது. நாம் ஒரு செயலை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். உழைப்பிற்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைத்தால் தான் நிறைவு பெறுகிறது. ஊரிலேயே பெரிய ஆலமரம்.அதற்குக் கீழே ஒரு திண்ணை.அந்தத் திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான். அவன் வேலை அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டே இருப்பது.. வெட்டியாய்ப் பேசிக் கொண்டு இருப்பது. சோறும் அப்படித் தான் கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான். இ...

வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன!_

 *வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,* 1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 2.வரையறுக்கப்பட்ட இலக்கு 3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் 4.சரியான கண்ணோட்டம் 5.தன் மீதான முழு நம்பிக்கை *1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி:* நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனைச் சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது ‘வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது. *2. வரையறுக்கப்பட்ட இலக்கு:* தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். ‘குறிக்கோள்’ அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம், ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும். *3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:* நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத் தான் குறை ...

சுய அனுபவமே உண்மையானது....

 ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்துகொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது. இதனால் மனம் வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை. அ...தாவது, அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி, "குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்...

வார்த்தையில் உள்ள சக்தியின் பலம்

 ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா? என கூறி சிரித்தான். அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார். இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளு...

மனதில் உறுதி வேண்டும்….

 ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர். கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர். பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்.. அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது. ஓடையை சில சிறுவர்கள் அனாவசியமாக தாண்டிக் குதித்துச் சென்றனர். ஆனால் ஒரு சில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோ என்ற பய உணர்வில் தாண்டிக் குதிக்க மறுத்து விட்டனர். எதிர்க்கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும் அவர்கள் தாண்டிக் குதிக்கவில்லை. அதற்கான முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை சிறிது தூரம் நடந்து சென்று தண்ணீர் குறைவாகச் சென்ற இடத்தில் இருந்து ஓடையைக் கடந்து மறுபக்கம் சென்றனர், சிறுவர்களில் பலர் அபாரத் துணிவு மிக்கவ...

அம்மாடியோவ், எல்லாமே இருக்கிற மாதிரி தோணுதே.

 சுஜாதாவின் படைப்புகளில் எப்போதுமே ஹ்யூமர் கலந்திருக்கும் 👇 _விசேஷங்களில்_ _அழகான இளம்_ _பெண்களைக் கண்டால்_ `` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ `` _என்று நினைப்பது போய்…_ _சித்தி பையன் பாலாவுக்கு_ _இந்தப் பொண்ண கேக்கலாமே_ _எனத் தோன்றுகிறதா.??_ ~ *÷÷÷÷*~ _சண்டை போட்ட_ _உறவினர்களின் மேல்_ _காழ்ப்பணர்ச்சி விகிதம்_ _கரைய ஆரமபித்திருக்கிறதா???_ ~ *÷÷÷÷÷* ~ _உறவுகளில்_ _சம வயதினர்_ _அமெரிக்காவில்_ _செட்டில் ஆனால்_ _பொறாமைப்படுவது நின்று_ _நம்ம பையனுக்கு_ _பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_ _REFER பண்ண_ _ஆளிருக்கு_ _என மனது_ _சாந்தப்படுகிறதா. ??_ ~ *÷÷÷÷* ~ _மனைவியை_ _கவனிக்க_ _தவறிவிட்டதாக_ _உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_ ~ *÷÷÷÷* ~ _திரைப்படங்களின்_ _முதல் நாள் முதல் காட்சி_ _பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??_ ~ *÷÷÷÷* ~ _வெள்ளை முடி கவலை_ _அப்பிக் கொள்ள_ _ஆரம்பித்துவிட்டதா???_ ~ *÷÷÷÷* ~ _மியூசிக் சேனல் பார்ப்பது_ _குறைந்து_ _செய்தி சேனல் பார்ப்பது_ _அதிகரித்திருக்கிறதா??_ ~ *÷÷÷÷* ~ _ஞாயிற்றுக்கிழமை_ _யார் வற்புறுத்தலும்_ _இன்றி_ _காலையில் WALKING_ _போகிறீர்களா??._ ~ *÷÷÷÷* ~ _இன்னிக்கு அமாவாசை,_ ...

செந்தில் என்பது தமிழ் சொல்லா?

Image
 பொருளில்லாச் சொல்லெதுவும் தமிழில் இல்லை. பொருளில்லை என்றால் அச்சொல் தமிலில்லை - என்னும் தொல்காப்பியன் வாக்கின் அடிப்படையில் முதலில் — செந்தில் உள் என்ன இருக்கிறது பார்ப்போம் செந்தில் = செந்து + இல் எனப்பிரியும் செந்து = அணு இல்= இல்லை, இல்லாமை, இன்மை முழுச்சொல்லுக்கு = அணு இல்லாத , அணு இல்லாமல் உருவான என்று பொருள்வரும் இங்கு , முருகனின் பிறப்புப் பற்றியக் குறிப்பு ஒன்று : சிவனின் நெற்றிக்கண் நெருப்பு, சரவணப் பொய்கையில் விழுந்து உருவானவன் ., உலகின் பொதுவான , பிறப்பு இலகணம் போல, அணுக்களால் உருவாகாமல் , நெருப்பில் கருவாகி, நீரில் பிறந்தவன், பிற பிறப்புகள் போல அணுக்கள் இல்லாதவன் முருகன்., இப்பொழுது செந்தில் - என்றால் செந்து + இல் = அணு + இல்லாதவன் = அணுவில்லாதவன், உடலில் அணுக்கள் இல்லாதவன், (பிற பிறப்புகள் போல் இல்லாமல்) அணுவின்றிப் பிறந்தவன் என்று பொருளாகிறது அடுத்து செந்தூர் — க்கு வருவோம் திரு + செந்து + ஊர் = திருச்செந்தூர் செந்து = ஓசை, பண் சொல்லின் பொருள் = சிறந்த ஓசை எழும்பும், கேட்கும் ஊர் என்று பொருள் வரும் இங்கு, திருச்செந்தூர் கோவிலைப் பற்றிய செய்தி ஒன்று : கருவறையில் இருக்...

வரலாற்றில் இன்று-[ 29 மே 2022]

Image
 உலக தம்பதியர் தினம்  சர்வதேச அமைதி காப்போர் தினம்  நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)  இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)  ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867) ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

மாடு எல்லாம் zomato la ஆர்டர் பண்ணி சாப்பிட ஆரம்பிடுச்சி போல

Image
 

பிள்ளைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்; கையாள்வது எப்படி?

 சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். பிள்ளைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்; கையாள்வது எப்படி? பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் -13 சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் 'பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்...

புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல்

 புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்றும் மனது புண்பட்டால் சிகரெட் குடித்து அதை ஆற்றுவது போலவும் இதற்கு பொருள் கொள்ளப் பெறுகிறது. ஆனால் ஆண், பெண் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் துன்பம் வருவது ஆதனால் மனது புண்படுவது இயற்கை நமக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் இயல்பாக வாழ்தல் இயலாது எனவே புண்பட்ட மனதை அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிராமல் வேறு ஒன்றின் பால் (புக விட்டு) செலுத்தினால் மனப்புண் ஆறும் என்பதையே புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆத்துதல் என்றனா். இதில் புகவிட்டு என்பது புகை விட்டு என்றாகி தவறான பொருள் கொள்ள வைத்துள்ளது.

விலைகுறைப்பு

 ஒரு முட்டாள்கள் தேசத்து மாமன்னனின் தொழிலதிபர் நண்பர்கள், " நாங்கள் தயாரிக்கும் ரொட்டியின் விலையை 15 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்த வேண்டும் " என கோரிக்கை வைத்தார்கள். ***யோசித்த மன்னன், "சரி.. ₹ 50 என்று உயர்த்திக் கொள்ளுங்கள் " என்றார். ***அதைக் கேட்ட தொழிலதிபர்கள், "வேண்டாம் மன்னா.. மக்கள் அவதிப் படுவார்கள் .." என்று சொல்லிப் பார்த்தார்கள். ***மன்னன் கேட்கவில்லை - அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரே வரியில் கூறிவிட்டார். ***ரொட்டி விலை உயர்ந்தது .. மக்கள் திண்டாடினார்கள் .. மன்னனிடம் சென்று முறையிட்டார்கள். ***மக்கள் குறையை கனிவுடன் கேட்ட மன்னன், அனைத்து ரொட்டி தயாரிப்பாளர்களையும் அடுத்த நாளே அரண்மனைக்கு வர உத்தரவிட்டான். ***என்ன முடிவாகுமோ என கவலையுடன் காத்திருந்தனர் மக்கள் - அரண்மனைக்கு வெளியே .. ***கூட்டம் முடிந்தது .. அனைவரும் வெளியே வந்தனர். ***வந்தவர்களை சூழ்ந்து கொண்ட மக்கள், என்னவாயிற்று என பதட்டத்துடன் கேட்க - ***"உங்கள் நலனை கருத்தில் கொண்டு, ரொட்டி விலையை ₹ 30 க்கு குறைக்க மன்னர் உத்தரவிட்டுள்ளார். ***அதிலும் 5 ரூபாய் அவர் தரப்பி...

பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்

 ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன. வெள்ளை மாடுதான் சண்டையில் வெற்றி பெறும்!'' என்றது ஒரு குழு தவளைகள். இல்லை, இல்லை செவலை மாடுதான் வெற்றி பெறும்!'' என ஒரு குழுவும் தவளைகளுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டு, ஆர்வத்துடன் மெய் மறந்து மாட்டுச் சண்டையைக் கவனித்தன. அப்போது அங்கு வந்த கிழத் தவளை, ""இந்த மாட்டுச் சண்டையில் எது வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன? சண்டையை வேடிக்கை பார்த்து உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்!'' என்றது. ""என்ன தாத்தா! நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காங்க, நீங்க என்னடான்னா இப்படிப் பேசுறீங்களே!'' ""ஆமாப்பா... இந்த சண்டையால் நம் இனம்தான் பாதிக்கப்படும் வாருங்கள் குளத்தை விட்டு வெளியேறுவோம்!'' என்றது. ""இந்த கிழத்துக்கு வேறு வேலையே இல்லை. தானும் லைப்பை என்ஜாய் பண்ணா...

இன்று செய்ய வேண்டியதை நாளைக்கென்று தள்ளி வைத்தால்

 ஒரு ஞானி இருந்தார். அவர் ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர். அவர் ஒரு இடத்திற்குச் செல்லும்போது, ஒரு மனிதனின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த மனிதன் ஏழையாக இருந்தாலும், அவரை மிகவும் நல்ல முறையில் உபசரித்தான். அவரிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்துகொண்டான். ஆனால், அவன் ஒரு சோம்பேறி. அவனது நடத்தை ஞானியைக் கவர்ந்தது. அவர், புறப்படும் முன்பு சொன்னார்: ""நண்பனே, நீ ஏழையாக இருந்தாலும் நீ என்னை நல்ல முறையில் உபசரித்தாய். உனது அன்பும், அடக்கமும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே, நான் உனக்கு இந்தப் பூவை பரிசளிக்கிறேன். இது பார்வைக்கு சாதாரணப் பூவாகத் தெரிந்தாலும், உண்மையில் மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இந்தப் பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். ஆனால், இந்தப் பூ இரண்டு நாட்கள் மட்டும்தான் மலர்ச்சியாக இருக்கும். அந்த இரண்டு தினங்களுக்குள் நீ உனக்குக் கிடைக்கும் இரும்பை, தங்கமாக்கிக்கொள்ளலாம். இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப் பூ வாடிவிடும். வாடிவிட்டால் அதற்குச் சக்தி இருக்காது. இதைக் கவனமாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.'' அவர் சென்ற பிறகு அந்தச...

கொள்முதல்- ஒரு பக்க கதை

 இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய் தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும் தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள் எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா…! சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,…இந்தாங்கம்மா தொண்ணூறு ரூபாய் என அவன் கொடுத்து சென்றான் ஏதோ …சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள் சாந்தி! மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம் வெல வெலத்துப்போனாள்… என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…? பேப்பருக்கு இடையில…! அவன் பேப் பேச சாந்திக்கு வியர்த்தது! ‘இந்த அஞ்சு பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது? இந்தாங்கம்மா…! என எடுத்து நீட்ட…. அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக மாறி இருந்ததை சாந்தியால் உணர முடிந்தது

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
 எனது செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது. எனது வங்கி கணக்கில் நாற்பத்தி எட்டாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட செய்தி அது. யூடியூபில் இருந்து கடந்த மாதம் நான் சம்பாதித்த தொகை. எனது ஒட்டுமொத்த வங்கி கணக்கு இருப்பு 5 லட்சத்தை தாண்டி இருந்தது. சரியாக எனது யூடியூப் சேனலை ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. கடந்த வருடம் இந்த மாதம் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று நினைத்து பார்க்கிறேன். ஒரு தனியார் நர்சரி பள்ளிக்கு வேலை கேட்டு சென்றேன். சரியாக காலை 9 மணிக்கு வரும்படி சொல்லி இருந்தார்கள். சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலையில் சாப்பிடக் கூட இல்லை. பள்ளிக்குச் சென்று தாளாளர் அறைக்கு முன் காத்திருந்தேன். நேரம் சென்று கொண்டே இருந்தது. நிறைய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அட்மிஷன் போடுவதற்காக வந்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் உட்காருவதற்கு இடம் இல்லாமல் பெற்றோர்களின் நின்று கொண்டிருக்கும்போது நான் அமர்ந்து இருந்ததை தலைமை ஆசிரியை பார்த்துக்கொண்டே சென்றார். நான் எழுந்து ஒரு பெற்றோருக்கு இடம் கொடுத்தேன். மணி 12 ஆனது. வயிறு பசித்தது. கால் வலித்தது. ஒருவழியாக என்னை உள்ளே அழைத்தன...

இந்த ஓவியம் சொல்லும் கதை இது தானா?

  ஒரு காலத்தில், ஒரு இராஜ்யம் இருந்தது. அந்த இராஜ்யத்தின் ராஜாவிற்கு ஒரு காலும், ஒரு கண்ணும் இல்லை, ஆனால் அவர் மிகவும் புத்திசாலி மற்றும் அன்பானவர்.           ஒரு நாள் ராஜா அரண்மனை வாசல் வழியாக நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மூதாதையரின் ஓவியங்களைக் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது குழந்தைகளும் இதே போல் அரண்மனை வாசல் வழியாக நடந்து வரும் போது, அவர்களுடைய மூதாதையரின் ஓவியங்களைப் பார்ப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தார்.           ஆனால் ராஜாவிடம் வரைந்த உருவப்படம் இல்லை. எனவே அவர் பல புகழ்பெற்ற ஓவியர்களை வரவழைத்தார். அரண்மனையில் வைப்பதற்காக அவருடைய அழகான உருவப்படத்தை வரைய விரும்புவதாக மன்னர் அறிவித்தார்.            அங்கிருந்த அனைத்து ஓவியர்களும் ராஜாவிற்கு ஒரு கால் மற்றும் ஒரு கண் தான் உள்ளது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். அவரது படத்தை எப்படி அழகாக வரைவது? அது சாத்தியமற்றது என்று ஒவ்வொரும் ஒவ்வொரு சாக்குகளைச் சொல்லி ஓவியம் வரைய மறுத்து விட்டனர்.         அப்போது ஒரு ஓவியர் ...

வரலாற்றில் இன்று-[ 28 மே 2022]

 ஆர்மீனியா குடியரசு தினம் பிலிப்பைன்ஸ் கொடி நாள் நேபாள குடியரசு தினம் கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952) தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)

புத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் என்பது உண்மையா?

 அது அப்படியல்ல! அறிவு மிகுந்தவர்களின் அறிவு கூர்மையாக இருக்கும். அதன் விளைவாக, அவர்கள் அதிகம் கவனிப்பார்கள். அவர்களின் கவனிப்புகளைத் தேவையான இடங்களில் வெளிப்படுத்தவும் அவர்கள் அதிகமாகப் பேசவும் வேண்டியிருக்கும். ஆனால், அவர்களை அடையாளம் காண ஒரே ஒரு வழிதான்; அஃது அவர்களின் கவனிக்கும் திறம். கவனிப்பதால் அவர்கள் அதிகப் பலனை அடைகிறார்கள். அதிகம் உட்கிரகிக்கிறார்கள். சூழலையும் மனிதர்களையும் முழுதும் விளங்கிக்கொண்டு, உள்வாங்கிக் கொண்டால் சரியான முடிவினை எடுக்க முடியும். அப்படி முடிவு எட்டிய பின்னர் பேசுவதாலும் அல்லது செயல்படுவதாலுமே அவர்கள் அதிகம் பேசுவதில்லை என்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஏன் அப்துல்கலாமே பலமுறை மாணவர்களுடனும் சிலமுறை குழந்தைகளிடம் உரையாடும் போது அதிகமாக சிரித்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார். அதனால் அவர் அறிவாளி இல்லையா? அறிவுக் கூர்மையானவர்கள் அதிகம் கவனிப்பார்கள். குறைகுடம் தளும்பும் என்பது பிதற்றல் என்று ஒரே வகையைக் குறிக்க மட்டுமே. அதை அறிவாளிகளுக்கும் பொருத்துவது அபத்தம்! அறிவாளிகளும் சில சமயம் அதிகமாகப் பேசலாம். பிறகு அறிவாளிகளின் அறிவு எப்படித்தான் வெளி ...

நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க முடியும்….

 புத்தர் ஒருமுறை தமது மேலாடையில் நிறைய முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போனார். முடிவில் துணியே முடிச்சுகளின் மூட்டையாகிவிட்டது. "முன்போல் துணியை எப்படி ஆக்குவது” என்று சீடர்களைக் கேட்டதும் அவர்கள் திணறினார்கள். “நான் கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும்" என்று கூறியபடி வரிசையாக அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்து மறுபடியும் மேலாடையாக்கினார். “நான் போட்ட முடிச்சுகளை நீங்கள் பிரிப்பது கஷ்டம். ஆனால் நானே பிரிப்பது வெகுசுலபம். ஏனென்றால் எதை அடுத்து எது போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும் இப்படியே உங்கள் மனத்தில் விழுந்த கவலை முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம் பிறர் பிரித்துததரவேண்டும் என்று எதிர் பார்ப்பது கடினம்" என்றார். இன்று பலரும் தங்கள் கஷ்டங்களை வெளியில் இருந்து யாராவது தீர்த்து விட மாட்டார்களா என்று தவிக்கிறார்கள். ஜோதிடர்கள், குறி சொல்லிகள், விளம்பர வெளிச்ச சாமியார் கம்பெனிகள், தாயத்து முதல் தகுடுகள் வரை தந்து மனிதர்களை அடகு பிடித்து விற்பனைக்கு வைக்கும் மந்திர மனிதர்கள் இப்படி யாரிடமாவது போய்ப் பணம், நேரம், ஏன் தன்னையே தொலைக்கின்றார்கள். ஆனால் நமது பி...

கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால்…

 ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு. உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு. உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு. இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது. தன் பலம் முழுவதையும் சேர்த்து. என்ன ஆச்சு. முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு. இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு. அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல். மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து. தேவையற்ற கோபம்,...

வரலாற்றில் இன்று-[ 27 மே 2022]

Image
 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம் - 1964 நைஜிரியா குழந்தைகள் தினம் நேரு நினைவு தினம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார் . இவர் பண்டிட் நேரு , பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார் . நேரு நவம்பர் 14, 1889 இல் பிறந்து மே 27, 1964 இல் இறந்தார் . இவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படுகிறது . இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக நேரு செயல்பட்டார் . வெள்ளையனே வெளியேறு இயக்கம் , ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார் . அவர் வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளார் . உலக வரலாற்றின் காட்சிகள் , சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் ஆகிய நூல்களை எழுதினார் . இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்டு 15, 1947 இல் புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச்சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது . இவர் உலக அமைதிக்காகவும் பாடுபட்டார் .

தனித்துப் போகிறான் மனிதன்... தவிக்கப் போகிறான்!

 காலையில் எழுப்பிட  அப்பா வேண்டாம்  - alarm app இருக்கு! நடைபயிற்சிக்கு  நண்பன் வேண்டாம்  - step counter இருக்கு! சமைத்து தந்திட  அம்மா வேண்டாம்   - zomato, swiggy app இருக்கு! பயணம் செய்ய  பேருந்து வேண்டாம்  - uber,ola app இருக்கு! விலாசம் அறிய  டீ கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம் -google map இருக்கு! மளிகை வாங்க  செட்டியார் தாத்தா கடைக்கும், அண்ணாச்சி கடைக்கும் போக வேண்டாம்  - big basket இருக்கு! துணி, மணிகள் வாங்க கடைத்தெரு போக வேண்டாம்  -amazon , flipkart app இருக்கு! நேரில் சிரித்து பேசிட நண்பன் வேண்டாம்  - whatsapp, facebook இருக்கு! கைமாறாக பணம் வாங்க பங்காளியும், அங்காளியும் தேவையில்லை  - paytm app இருக்கு! மற்றும்  பல தகவலுக்கு நம்ம -google டமாரம் இருக்கு! இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... -app என்னும் ஆப்பு!!! உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க! விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.! சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்! விழித்தெழு  விடை கொடு..! செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவ...

வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை….

Image
  தூதுவளை கீரையை தூது கொண்டு போன சம்பவம் வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையிலும் நடைபெற்றது. சோழ நாட்டின் மன்னரான ஆளவந்தார் அரச விவகாரங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மிக முன்னேற்றம் காண முடியாமல் இருந்தார். மன்னரின் பாட்டனாரான நாதமுனி சுவாமிகளின் சிஷ்யரான ஆச்சாரியர் மணக்கால் நம்பிக்கு, ஆளவந்தார் அவர் முன்னோர்கள் போல் ஆன்மிக வழி செல்லாமல் ராஜபோகத்தில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே என்று மிகவும் மன வருத்தம். அவரை எப்பாடுபட்டாவது மாற்ற விரும்பினார். ஆனால் மன்னரை சந்திக்க சாதாரண மனிதரான அவருக்கு நிறைய தடைகள். அவர் மிகவும் யோசித்து ஒரு யுக்தியை கையாண்டார். மன்னருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு, மன்னரின் சமையலறைக்கு தினமும் தூதுவளை கீரையை பறித்துக் கொண்டு போய் கொடுத்தார். கீரை மிகவும் சுவையாக இருந்ததால் மன்னர் அதை மிகவும் விரும்பி உண்டார். ஆறு மாதங்கள் தொடர்ந்து கீரை கொடுப்பது தொடர்ந்தது. பிறகு திடீரென்று மணக்கால் நம்பி கீரை கொடுப்பதை நிறுத்தி விட்டார். இப்போதெல்லாம் சமையலில் தூதுவளை கீரை இல்லையே என்று மன்னர் கேட்க, சமையலறையில் பணிபுரிபவ...

வரலாற்றில் இன்று-[ 26 மே 2022]

 ஜார்ஜியா தேசிய தினம் போலந்து அன்னையர் தினம் ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918) பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966) ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது(1986)

படித்ததில் வலித்தது.-- பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!!

 “எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே? அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியதுதானே! பெரியவர் கேர்ள்ஸ்னா காசு கேக்க மாட்டார். சரியான ஜொள்ளு பார்ட்டி!” “சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்... நீ பாக்கறதுக்கு அப்படியே தமன்னாவாட்டம் பளபளனு இருக்கே. உன் காலைப் பார்த்துக்கிட்டே மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!’’” இப்படி அழுத்தம் கொடுக்க வேறு வழியின்றி, அந்த தமன்னா பெரியவரிடம் போக, செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார். தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்று கேட்டாள். ‘‘என்னம்மா இது? உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு! கிளம்பு’’ என்றார் பெரியவர். பக்கத்தில் நின்ற தோழி அவள் காதில் ‘‘பாத்தியாடி? நான் சொல்லலை... பெருசு ஜொள்ளு பார்ட்டி!’’ என்று கிசுகிசுத்தாள் . ‘‘உஷ்...’’ என அவளை அதட்டிவிட்டு தமன்னா ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள். ‘‘எடுத்துக்கங்க. இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது. கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும். அப்பத்தானே உங்க பெண்ணைக் காலேஜ்ல ...

வரலாற்றில் இன்று-[ 25 மே 2022]

 உலக தைராய்டு தினம் அர்ஜெண்டினா தேசிய தினம் லிபனான் விடுதலை தினம்(2000) அமெரிக்கா தனது முதல் அணுஆற்றலினால் இயங்கும் பீரங்கியைச் சோதித்தது(1953) ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது(1963)

வரலாற்றில் இன்று-[ 23 மே 2022]

Image
 மெக்சிகோ மாணவர் தினம் மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929) கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்  ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உயிரியலாளரும், மருத்துவருமான கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) பிறந்த தினம் இன்று (மே 23) தாவரவியலாளர், விலங்கியல் நிபுணர், ஆய்வாளர், வகைப்பிரித்தல் நிபுணர் மற்றும் மருத்துவர் ஆவார். உயிரினங்களின் இரட்டைப் பெயர் முறையை அறிமுகப்படுத்தியவர்.  எனவேதான் அவர் "நவீன வகைப்பிரிப்பின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.  உலக ஆமைகள் தினம் ஆமைகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே, 23ஆம் தேதி ஆமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது

How to: வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் எலும்பை பலப்படுத்துவது எப்படி? I How to strengthen bones?

 உடல் வலிமையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது எலும்புகள். உணவுகளில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் எலும்புகளை பலப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளை பகிர்கிறார், ஸ்போர்ட்ஸ் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். எலும்புகளை பலப்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம், உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றாலே கார்டியாக் பயிற்சிகளைத்தான் பலரும் மேற்கொள்வார்கள். அதாவது நீச்சல், நடைப்பயிற்சி, ஒட்டப்பயிற்சி, சைக்ளிங் போன்றவை. இவை உடலுக்கும் மனதுக்கும் மிக ஆரோக்கியமானதுதான். ஆனால் எலும்புகளை பலப்படுத்தவும், தசைகளை பலப்படுத்தவும் வெயிட் ட்ரைனிங் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதற்கு ஜிம் செல்வது சிறந்த முறையாக இருந்தாலும், வீட்டிலும் செய்யலாம். அதற்கு முன்னதாக ஒரு புரொஃபஷனல் பயிற்சியாளரிடன் பயிற்சி எடுத்து கொண்டு செய்வது அவசியம். யோகா பயிற்சியும் செய்யலாம், மிகவும் நல்லது. தினமும் 20 நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படுவது போல பார்த்துக்கொள்ள வேண்டும். முகத்தை துணியால் மூடிக்கொண்டு, உடலில் கால், கை, மற்ற பகுதிகளில் சூரிய ஒளி படுவது போன்று நிற்பதோ, நடப்பதோ, சூரிய நமஸ்காரம் மேற்கொள்...

UPSC தேர்வு: "முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது எப்படி?"- வழிகாட்டும் விஷ்ணு IAS

Image
 "இப்போதெல்லாம் இணையத்தில் நிறையத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தி நாம் UPSC தேர்வுக்குத் தயாராக முடியும். ஆனால், நான் படிக்கும்போது புத்தகங்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டும்." - வே.விஷ்ணு IAS சாமானிய மக்களோடு நெருக்கமாகப் பழகக் கூடிய நெல்லை மாவட்ட ஆட்சியரான வே.விஷ்ணு IAS, வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர். அதனால், ‘தூய பொருநை நெல்லைக்குப் பெருமை’ என்ற தாரக மந்திரத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், ”நான் 2009-ல் திருச்சி என்.ஐ.டி-யில் பி.டெக் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் எனக்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிதித்துறை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அமெரிக்க வேலையில் கைநிறைய சம்பளம் கிடைத்த போதிலும், நாட்டுக்குச் சேவையாற்றவில்லை என்கிற எண்ணம் எழுந்து கொண்டே இருந்தது. அதனால் இரண்டு ஆண்டுகளில் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு நாடு திரும்பினேன். 2011-ல் சொந்த ஊருக்கு வந்ததும் பிரதமரின் ...

எந்த நுழைவுத் தேர்வு எப்போது?

Image
இந்திய அளவில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், அவை நடைபெறும் தேதிகள் மற்றும் மேலதிக தகவல்களை எந்த இணைய முகவரியில் சென்று பார்க்கலாம் என்கிற விவரம் இதோ:

வரலாற்றில் இன்று-[ 22 மே 2022]

Image
 இலங்கை குடியரசு தினம் - 1972 ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர் - 1906 உலக பல்லுயிர் பெருக்க தினம் மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் நாதா நகர் கிராமத்தில் மே 22, 1722 இல் ராஜாராம் மோகன் ராய் பிறந்தார் . இந்தியாவின் விடிவெள்ளி , புதிய இந்தியாவை நிறுவியவர் , புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என இவரைப் புகழ்கின்றனர் . மூடநம்பிக்கைக்கும் , ஏனைய தீமைக்கும் எதிராக குரல் எழுப்பினார் . அனைத்து மக்களும் , சாதி , சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என வலியுறுத்தினார் . பெண்கள் உரிமைக்காகவும் , விதவைகள் மறுமண உரிமைக்காகவும் , பெண்களின் சொத்து உரிமைக்காகவும் பாடுபட்டார் . பெண்களுக்கு கட்ட...

உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல்

அத்தியாவசிய பொருளிலிருந்து ஆடம்பரப் பொருள் வரை நுகர்வோருக்கு இன்று ஆயிரம் தேர்வுகள் இருக்கின்றன.தனக்குத் தேவையானதை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோரிடம் இருக்கிறதா, இல்லை அவர்களின் தேவையை விற்பனையாளர்கள் தீர்மானிக்கிறார்களா- விளக்கம் தர முயற்சிக்கிறது இந்த கட்டுரை 90-களின் முன்பாதி வரையில், கிராமம் அல்லது சிறுநகரத்துத் மளிகைக் கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும் போது, பொருள்களைச் சொல்லச் சொல்ல எடுத்துப்போடும் கடைக்காரர் “வேற..வேற..” எனக் கேட்டுக் கொண்டே இருப்பார். இந்த “வேற” என்பதன் அர்த்தம், கடையில் புதுசா சில பொருள்கள் வந்திருக்கு என்பதே. வாடிக்கையாளரின் தேவையை, ஆசையை கடைக்காரரின் வேற என்ற வார்த்தை தூண்டிவிடும். இது அன்றைய வியாபார உத்தி. இன்று அந்தக் கடைகளின் கணிசமான இடத்தை சூப்பர்மார்க்கெட் வகை கடைகள் பிடித்திருக்கின்றன. வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் என்பதே இந்த வகைக் கடைகளின் வியாபார மந்திரம். கடைநிறைய பொருள்களை அடுக்கி வைத்து, நமக்குத் தேவையானவைகளை நாமே எடுத்துக் கொள்ள வசதி செய்து தந்திருக்கின்றன. நாமும் “ட்ராலி”யை தள்ளிக் கொண்டே கடையின் பல இடு...

& this is why India doesn't need robotic automation...

பிள்ளையார் சுழி ரகசியம்

Image
 

குழந்தைகள் திசைமாறுவதை முன்பே கண்டறிவது எப்படி? - டாக்டர் குமணன், மதுரை அரசு ஆஸ்பத்திரி மனநலத்துறை தலைவர்

Image
  “ஒவ்வொருவரின் வளர் இளம் பருவம்(12 வயதில் இருந்து 18 வயது வரை) மிகவும் முக்கியமானது. மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் மாற்றம் ஏற்படும். மூளை பக்குவமடையும். ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றமாக இருக்காது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பது தாமதமாகும். சிலருக்கு வயதுக்கு மீறிய மாற்றம் இருக்கும். இவை மனரீதியான மாற்றங்கள், பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். இந்த நேரத்தில்தான் தன்னிச்சையான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பெரியவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள். அந்தநேரத்தில் குழந்தைகளை மிகவும் கவனமாக வழிநடத்த வேண்டும். இந்த வயதில் ஏற்படும் பழக்கங்கள்தான் வளர்ந்தபின்பும் தொடரும். அவ்வப்போது பெற்றோர் கண்டித்தால் பெரும்பாலானவர்கள் மாறிவிடுவார்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தனி அக்கறை காட்டினர். பெரியவர்களின் கண்டிப்பினால் சிறியவர்கள் கட்டுபாட்டுடன் இருந்தனர். குறிப்பாக வீடுகளில் ஆபாசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியினால் பாலியல் விஷயங்களை உள்ளங்கையில் உள்ள செல்போன் மூலம் நொட...