ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..! வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..! அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..! பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..! பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..! சர்வர்.. சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..! பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..! சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..! பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..! சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு ...
ஒரு வணிகா் விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமான வந்தாா். போா்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக அவரது போா்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு விரைவில் விமானம் ஏறினார். அது மூன்று பேர் அமரும் இருக்கை.ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும், நடைபாதை அருகே ஒரு சிறிய பெண்ணும் இருந்தார்கள். அவா்கள் இருவரையும் பாா்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்து விட்டு வடிவில் அமா்ந்தாா். அவா் அந்த சிறு பெண்ணை பாா்க்கும் போது தனது மகளை நினைத்தாா். இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும். அமைதியாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள். அவரும் அந்த சிறு பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாா். அவா் மனதில் இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக இருந்தது. ஆனால், தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்து கொண்டாா். எனினும் பயணம் முழுவதும் அவள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என நினைத்தாா். அவரும் பெண்ணை பெற்றவரல்லவா? சுமார் ஒரு மணிநேரம் பயணத்திற்கு பின் விமானம் திடீரென குலுங்க தொடங்கியது. பைலட் ஓலிப்பெருக்கி மூலம் பயணிகளிடம் “நாம் கடினமான வானிலை எதிா் கொண...
“நாம் நினைத்த அளவுக்கு நம் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லையே என ஐம்பது வயதுக்குப் பிறகுதான் பலரும் உணர்கிறார்கள். ஆனால், இதனை இளம் வயதிலேயே உணர்ந்து, நம்முடைய வளர்ச்சியைத் தடை செய்யும் பிரச்னைகள் என்னென்ன என்பதை அறிந்து மாற்றிக்கொள்வது நல்லது. மாற்றம் என்பது உள்ளுக்குள் இருந்துதான் வரவேண்டும். தொடர் சிந்தனையின் மூலமே இந்த மாற்றம் என்பது சாத்தியமாகும். இந்தத் தொடர் சிந்தனை என்பதைப் பழக்கத்துக்குக் கொண்டு வரும்போது உங்களை அறியாமலேயே நீங்கள் முன்னேறுவீர்கள்” என்கிறார் `பொட்டன்ஷியல் ஜெனிசீஸ்’ மனித வள நிறுவனத்தின் அறிவாற்றல் மாற்றலுக்கான பிரிவின் தலைமை அதிகாரி ராமமூர்த்தி கிருஷ்ணா. வளர்ச்சிக்கான தடைகளையும், அந்தத் தடைகளில் இருந்து எப்படி மேலே வருவது என்பது குறித்தும் அவர் பத்து வழிகளைச் சொல்கிறார். 1. சிந்தனையைச் சரிசெய்வோம் வாழ்க்கையில் நம் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம், நம் சிந்தனைதான். குழந்தைப் பருவத்திலும், பால்ய பருவத்திலும் நம்மைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களும், நம்மைப் பாதித்த விஷயங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிந்து, நம் சிந்தனையைத் தடை செய்கின்றன. இவ்வாறு ...
Comments
Post a Comment