ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டிய கலைகள் யாவை?
- நல்லதோ கெட்டதோ, தப்போ சரியோ எதுன்னாலும் தனியா முடிவெடுக்க சொல்லுங்கள். அப்போதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீச்சல், வண்டி ஓட்ட தெரிதல், சொந்தமாக வங்கிக் கணக்கு இதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்னு சொல்லிக் கொடுங்க.
- பையனோ, பொண்ணோ எல்லாரும் மனுசன்தான். எல்லாரையும் சமமாகத்தான் பாக்கணும்னு சொல்லிக் கொடுங்கள். பொண்ணுதானன்னு அலட்சியமா பாக்கக்கூடாதுன்னு சொல்லிக்கொடுங்க.
- குறைந்தபட்சம் ஒன்னு ரெண்டு சமையல் தெரிஞ்சிருக்கணும். யாரும் வீட்டுல இல்லன்னா பொழுதுக்கும் கிரிக்கெட் பாத்துட்டு இருக்காம வீட்ட பெருக்கி சுத்தமா வச்சிருக்கணும், சமச்சும் சாப்பிடனும்னு சொல்லிக்கொடுங்க.
- எல்லா வீட்டுலயும் கல்யாணத்துக்கு அப்புறமா.. "ஏங்க இந்த துண்ட கட்டிலுக்கு மேல போடாதீங்கன்னு எத்தனை முறைதான் சொல்றது?" அப்படின்னு ஒரு குரல் வரும். அந்த வார்த்தையை அந்த ஜீவன் பயன்படுத்தாத மாதிரி ஒருமுறை சொன்னாலே அத எப்பவும் கடைபிடிக்கணும்னு சொல்லிக்கொடுங்க. (துண்ட கொடில போட சொல்லிக்கொடுக்க)
- ஆயிரம் பிரச்சினை வெளில இருந்தாலும் வீட்டுல இருக்கவங்ககிட்ட அத கோபமா வெளிப்படுத்தாம பேசணும்னு சொல்லிக் கொடுங்க. பிரச்சினை எல்லாத்துக்கும் பொதுவானது.
- வீட்ல இருக்க கழிவறைகள சுத்தமா பராமரிக்கணும்னு சொல்லிக் கொடுங்க.
- டீ குடிக்கலன்னாலும் அத எப்படி தயார் பண்ணனும்னாவது சொல்லிக்கொடுங்க. அப்போதான் வீட்டுல யாருக்காவது உடம்பு சரிலன்னா கூட கொஞ்சமாச்சும் உதவ முடியும்.
- ஒரு குடும்பத் தலைவனாக உயர்வதற்கு முன்னரே குடும்பத்துல யாருக்கு என்ன வேணும்? வேணாம்? வீட்டுக்கு எத செஞ்சா நல்லாயிருக்கும்? இந்த செலவு தேவையா தேவையில்லையா? யாருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எல்லாரையும் புரிஞ்சி நடந்துக்கணும்னு சொல்லிக்கொடுங்க.
- ஆம்பள எடுக்குற முடிவுதான் சரியா இருக்கும். வீட்டுப் பெண்கள் எடுக்குற முடிவு சரியா இருக்காதுன்னு நினைக்கிறது தப்புன்னு சொல்லிக்கொடுங்க. நல்லதோ கெட்டதோ அந்த முடிவ எல்லாரும் சேர்ந்து எடுக்கணும்னு சொல்லிக்கொடுங்க. ஏன்னா ஆண் பிள்ளைகள்தான் நாளை குடும்பத்தின் தலைவராகப் போகிறார்கள். அப்போ நம்மை நம்பி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் தரலன்னா அந்த தலைமைக்கே அர்த்தம் இல்லாம போயிடும்.
- ரொம்ப முக்கியமா, பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லிக் கொடுங்க. என்னதான் ஆம்பள ரொம்ப அறிவாளித்தனமா பொய் சொன்னாலும், பெண்கள் முட்டாளாகவே இருந்தாலும் (ஒரு பேச்சுக்கு) "இவர் பொய் சொல்றாரு" ன்னு பெண்களோட உள்ளுணர்வு அப்பவே துல்லியமாக காட்டிக்கொடுக்கும். அதனால பொய் பேசி மாட்டிக் கொள்ள வேணாம். உண்மையே பேசுன்னு சொல்லிக்கொடுங்க.
Comments
Post a Comment