உங்கள் மனது வெறுமையாக உணரும் தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 டிவில முன்னூறுக்கும் மேற்பட்ட சேனல்ஸ் இருக்கும் ,ஆனா பாக்க தோணாது ...

மொபைல்ல புடிச்ச கேம்ஸ் இருக்கும்,ஆனா விளையாட தோணாது...

பிடிச்ச நொறுக்கு தீனி கண்ணுக்கு எதிர்ல இருக்கும்,ஆனா திங்க தோணாது ..

எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்,கம்ப்யூட்டர்ல 400க்கும் மேல படங்கள் இருக்கும் ஆனா பாக்க தோணாது..

காமெடி காட்சிகள் வந்தாலும் சிரிக்க தோணாது

வை--பை ,இன்டர்நெட் வசதி என எல்லாமே சுத்தி இருக்கும்,ஆனா ஒண்ணுமே செய்ய தோணாது...

வீட்ல யார் பேசினாலும் ,காரணமே இல்லாமே எறிஞ்சுவிழுவேன்,கத்துவேன் ...

இந்த மனவெறுமைக்கு சில நேரம் காரணங்கள் இருக்கும் ,சில நேரம் காரணமே இருக்காது...

காரணமே இல்லாத சமயத்துல,என்னடா வாழ்க்கை இது, காஞ்சு போன பண்ணு மாதிரி சப்புன்னு இருக்குனு தோணும்..

அந்த மாதிரி மனவெறுமை நேரங்களில் நான் செய்வது என்னவென்றால் ...



  • உலகத்துக்கு ஒரு பாஸ் வைச்சிட்டு போர்வையை இழுத்து போத்திக்கிட்டு தூங்கிடுவேன்.
  • அந்த ஈசனுக்கு நம்மிடம் அவன் திருவிளையாடலை காட்டுவதே வேலையாகி விட்டதுன்னு காட் மேல கோச்சிப்பேன்.
  • கஷ்டம் வரும் போது சிரிக்கணும்னு சொல்லியிருக்காங்க. அதை டெஸ்ட் பண்ண இதான் சரியான நேரம்னு ஆஹா, ஹிஹி ன்னு சிரிப்பேன்.
  • பாடல் கேட்பேன்.  சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்னு .
  • வெறுமையை மறக்க சிறிது உணவு வயிற்றுக்கு ஈயப்பட வேண்டும். சாப்பாடு ரெடின்னு கூப்டா போதும். வெறுமையாவது எருமையாவதுன்னு ஓடீடுவேன்.
  • இயற்கையோடு இயற்கையாக ஒன்றிவிடவும் வெறுமை மறைந்துவிடும்.
  • கோயிலுக்கு போயி அங்க இருக்க சிற்பங்களை ரசிப்பது.
  • நாம மட்டும் இந்த உலகத்துல கஷ்டப்படுல, நிறைய பேர்க்கு கஷ்டங்கள் இருக்கு. என்னமோ நீ மட்டும் தான் எல்லா கஷ்டத்தையும் தோளில் சுமக்குற மாதிரி சீன் போடாதே. ப்ரீயா விடுன்னு சொல்லிப்பேன்.

இந்த வெறுமையெல்லாம் சும்மா நொடி பொழுது வந்துட்டு போறது அதுக்கு அதிகமா சிந்தித்து இடம் கொடுக்காமல் சந்தோஷமான விஷயத்தில் கவனம் செலுத்தினால் அது தானா போயிடும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence