இன்றைய சிந்தனை ( 01.12.2021)

 *"நம் எண்ணங்கள் நமது அதிர்வெண்ணை நிர்ணயிக்கின்றன, மேலும் நாம் என்ன அதிர்வெண்ணில் இருக்கிறோம் என்பதை நம் உணர்வுகள் உடனடியாக நமக்குத் தெரிவிக்கும்."*

*மருத்துவத்திற்காக த்தான் கண்டுபிடிக்கப்பட்டது "மது" இன்று பல குடும்பங்களின் மரணங்களுக்கு பயன்படுகிறது என்பதை உணருங்கள்...!!*

*அன்று வேதங்களையும் புராணங்களையும் அன்பையும் சொல்லிக் கொடுத்த கல்வி இன்று பணம் சம்பாதிக்க மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது...!!*

*நல்லதை செய்து நல்லதை அறுவடை செய்ய நினைப்பவர்கள் நல்லதையே பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே நல்லதே செய்யுங்கள்.*

*என் மகிழ்ச்சியை பார்த்து என்னை தீர்மானித்து விடாதீர்கள். உங்களால் நினைத்து பார்க்க முடியாத சோகங்கள் எனக்கும் உண்டு...!!*

*எதிர்மறை எண்ணங்கள் வாழ்விற்கு ஒத்து வருவதில்லை. நேர்மறை எண்ணங்கள் இருந்துவிட்டால் வாழ்வது கடினம் இல்லை.*

*மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது.*

*"மாற்றான்" தோட்டத்து மல்லிகை மணக்கும். "மாற்றான்" எண்ணமும் அதுவாகத்தானே இருக்கும்...!!*

*கோபம் கொள்வது எந்த மனிதனும் செய்யக்கூடிய மிக எளிதான செயல்தான், ஆனால் சரியான நேரத்தில் சரியான நபரிடம், சரியான காரணத்திற்காகக்கோபப்படுவது என்பது எளிய செயல் அல்ல.*

*ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதீர். உட்காருகின்ற வயதில் நீங்கள் நினைத்தாலும் ஓட முடியாது....!!*

*இன்று செய்யக்கூடிய நற்செயல்கள் நாளை நன்மை தரக் காத்திருக்கும். எதுவும் தானாக வருவதில்லை... நாம் தான் முயற்சி செய்து பெற வேண்டும்.*

*அனுபவத்துக்கும், பக்குவத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். அடுத்தவர்களைத் திருத்துகிறோம் என நினைத்து அறிவுரை சொன்னால், அது அனுபவம்.*

*ஒரு கட்டத்தில் அவர்களே அனுபவப்பட்டுத் திருந்தட்டும் என அமைதியாக இருந்தால், அது பக்குவம்.*

*உங்கள் பார்வைகளை அழகு படுத்துங்கள். உங்கள் உள்ளத்தை தூய்மைப் படுத்துங்கள்.*

*பேச்சில் நேர்மையாக இருங்கள். நடக்கும் போது மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்😊

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்💐

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை