பணியில் நேர்மை - துணிவு
நீங்கள் வெற்றிகரமான பணியாளராக வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஒதுக்கிய வேலையில் கண்ணும் கருத்தாக இருப்பது அவசியம்..
வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து எவ்வாறு கூடுதல் கவனத்துடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம்.
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களின் பணியில் நேர்மையும்,கண்டிப்பும் அவசியம்..ஒருநாள் இரவு மாவீரன் நெப்போலியன் இராணுவ அதிகாரியின் உடை அணிந்து தனது படைகளைப் பார்வையிடச் சென்றார்..
அப்போது ஓர் இடத்தில் காவல்காரர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.. வந்து இருப்பது நெப்போலியன் என்று தெரியாது.மற்றும் அவர் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகிற்று..
அப்போது நெப்போலியன்,
நான் ஓர் இராணுவ அதிகாரி.படைகளை மேற்பார்வை செய்வதற்கு இங்கு வந்து இருக்கிறேன். என்னை உள்ளே போக விடு’’ என்றார்.
அதற்கு அந்தக் காவல் வீரர், ‘
யாராக இருந்தாலும் நான் இப்போது உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. காரணம் அப்படித் தான் எனக்கு உத்தரவு வழங்கி இருக்கின்றார்கள்..
மீறி நீங்கள் உள்ளே நுழைந்தால் நான் உங்களைச் சுட வேண்டி வரும் என்று சொல்லி துப்பாக்கியை ஓங்கினான்..
நெப்போலியன் அமைதியாகத் திரும்பிச் சென்று விட்டார்..
காலையில் அந்தப் படைவீரனை அழைத்த மாவீரன் நெப்போலியன் அவரின் கடமை உணர்ச்சியை மெச்சி அவனுக்கு உயர் பதவி வழங்கினார்..
நீங்கள் செய்யும் பணி மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதனால் உங்களின் மேல்அதிகாரிக்கு உங்கள் மீது நல்ல மதிப்பு ஏற்படும்.
உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்..
ஆம்.,நண்பர்களே..,
பணியில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அதற்கு நிச்சயம் பலன் உண்டு.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பாரபட்சம் இல்லாமல் கடமையைத் துணிவோடு செய்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்....
Comments
Post a Comment