ABC டிரிங்க் கேள்விப்பட்டிருக்கீங்களா?

 Apple, Beetroot, Carrot இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் ஏ.பி.சி ஜுஸ். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஜூஸ் என்பதால் ‘மிராக்கிள் டிரிங்க்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலிகை மருந்தாக சீன மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைப் பெற்றிருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல் என்று ஏபிசி ஜூஸின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம்.

சத்துக்களின் கலவை

உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கலவைதான் இந்த பானம். ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே பானத்தில் கிடைத்துவிடுகிறது.

√ A, B1, B2, B6, C, E மற்றும் K வைட்டமின்களும், ஃபோலேட், சிங்க், காப்பர், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசயம், நியாசின், சோடியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கே அடங்கியுள்ளது.

முதுமைத் தோற்றத்தை தவிர்க்கிறது

ABC டிரிங்கில் உள்ள A, B-Complex, C, E மற்றும் K வைட்டமின் சத்துக்கள் மினுமினுப்பாக தோற்றத்தைத் தருவதால் உண்மையான வயதைவிட மிகவும் இளமையாகத் தெரிவீர்கள். இதிலுள்ள தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் உறுப்புகளுக்கு புத்துயிர் அளித்து, அதன் இயக்கங்களை மேம்படுத்துகிறது.

சிவப்பழகைத் தரும்

முகப்பரு, கரும்புள்ளிகளுக்காக எவ்வளவோ க்ரீம்களையும், லோஷன்களையும் தடவி சலித்து போயிருப்பீர்கள்.

இவற்றுக்குக் காரணமான, உடலில் உள்ள தேயைற்ற ரசாயனக் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது.

இந்த அற்புத பானத்தை நாள் தவறாமல் குடித்து வந்தால் முகம் பளிச்சென்று மாறிவிடும். எந்த கிரீமும், லோஷனும் தடவ வேண்டிய அவசியமே இருக்காது.

கண்ணாடி இனி தேவை இல்லை

கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். அந்த கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்.

நினைவாற்றலைத் தூண்டுகிறது

பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற, விலையுயர்ந்த பானங்களை வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை வளர்க்கும் ABC பானத்தை தினமும் ஒரு கிளாஸ் கொடுத்துப் பாருங்கள். விளையாட்டு, படிப்பு என எல்லவாற்றிலும் சுறுப்பாவதுடன் நம்பர் ஒன்னாகவும் ஜொலிப்பார்கள்.

உள்ளுறுப்புகளின் வலிமைக்கு...

கல்லீரல், இதயம், சிறுநீரகம் இந்த மூன்று உறுப்புகள்தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியைச் செய்கின்றன. இந்த மூன்றைத் தவிர மற்ற உள்ளுறுப்புகளும் அதனதன் பணியைச் செய்ய அவற்றை பாதுகாப்பது அவசியம். ABC பானத்தில் கிடைக்கும் முக்கிய மூலப்பொருட்களான ஆல்ஃபா, பீட்டா கரேட்டின் மூலப்பொருட்கள் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், இதயநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

காய்ச்சல், ஆஸ்துமா, இரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை இரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதம் தந்து நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.

புற்றுநோய் அழற்சி குறையும்

பீட்ரூட்டில் பீட்டாசியின் என்னும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் பீட்ரூட்டில் உள்ள இரும்புசத்து சிவப்பணுக்கள் மீளுருவாக்கத்துக்கு உதவி புற்றுநோய் செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன்மூலமும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

எடையைக் குறைக்க...

கலோரிகள் குறைந்த ABC ட்ரிங் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்து முடித்தபிறகு இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்ப சொல்லுங்க இது மிராக்கிள் டிரிங்க்தானே !

எப்படி தயாரிப்பது?

ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நீர் சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்ட வேண்டும். அதை ஒரு டம்ளரில் எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலக்கினால் மிராக்கிள் டிரிங்க் ரெடி. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினமும் ஒரு டம்ளர் தவறாமல் குடித்து வந்தால் அற்புதமான பலன்கள் கண்கூடாகவே தெரிய வரும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY