புற்று நோயைக் குணமாக்க மன நோய் நிபுணரிடம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் அறியாமை
ஐ-போன் (i-Phone) போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஆப்பிள் (Apple) ஆகும். இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs). இவர் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர்.
"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது" - என்று உலகில் பேசப்படுகிறது. இதில் மூன்றாவது ஆப்பிள், “ஆப்பிள்” நிறுவனத்தைக் குறிக்கிறது.2003ம் ஆண்டு தனக்கு கணையப் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ள ஜாப்ஸ், அப்போது வந்த கட்டியை உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால் நான் தேவையில்லாமல் அதைத் தள்ளிப் போட்டு விட்டேன். இன்டர்நெட்டில் பார்த்த மூலிகை மருத்துவம், உணவுக் கட்டு்பபாடு, அக்குபங்சர் உள்ளிட்டவற்றை நான் பரிசோதித்துப் பார்த்தேன். இதனால் காலதாமதமாகி கட்டி பெரிதாகி விட்டது. ஒரு மன நோய் மருத்துவரைக்க கூட சந்தித்தேன் என்றால் எனது அறியாமையை புரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் ஒரு டாக்டரிடம் போனபோது, நிறைய ஜூஸ் குடியுங்கள் சரியாகி விடும் என்றார். இன்னும் நிறைய வழிகளைக் கூறினார். எல்லாம் ஹம்பக் ஆகி விட்டது. கடைசியாக 2004ம் ஆண்டுதான் அறுவைச் சிகிச்சைக்குப் போனேன். எனக்கு எனது உடலை அறுவைச் சிகிச்சை செய்து இன்னொருவர் பார்ப்பது பிடிக்கவில்லை. இதனால்தான் உலகில் உள்ள பிற வழிகளையெல்லாம் சோதித்துப் பார்க்க விரும்பினேன். கடையில் எனக்குப் பிடிக்காததுதான் நடந்தது. ஆனால் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். அதற்காக இப்போது வருந்துகிறேன் என்று கூறியுள்ளார் ஜாப்ஸ்.
Comments
Post a Comment