“நாம் நினைத்த அளவுக்கு நம் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லையே என ஐம்பது வயதுக்குப் பிறகுதான் பலரும் உணர்கிறார்கள். ஆனால், இதனை இளம் வயதிலேயே உணர்ந்து, நம்முடைய வளர்ச்சியைத் தடை செய்யும் பிரச்னைகள் என்னென்ன என்பதை அறிந்து மாற்றிக்கொள்வது நல்லது. மாற்றம் என்பது உள்ளுக்குள் இருந்துதான் வரவேண்டும். தொடர் சிந்தனையின் மூலமே இந்த மாற்றம் என்பது சாத்தியமாகும். இந்தத் தொடர் சிந்தனை என்பதைப் பழக்கத்துக்குக் கொண்டு வரும்போது உங்களை அறியாமலேயே நீங்கள் முன்னேறுவீர்கள்” என்கிறார் `பொட்டன்ஷியல் ஜெனிசீஸ்’ மனித வள நிறுவனத்தின் அறிவாற்றல் மாற்றலுக்கான பிரிவின் தலைமை அதிகாரி ராமமூர்த்தி கிருஷ்ணா. வளர்ச்சிக்கான தடைகளையும், அந்தத் தடைகளில் இருந்து எப்படி மேலே வருவது என்பது குறித்தும் அவர் பத்து வழிகளைச் சொல்கிறார். 1. சிந்தனையைச் சரிசெய்வோம் வாழ்க்கையில் நம் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம், நம் சிந்தனைதான். குழந்தைப் பருவத்திலும், பால்ய பருவத்திலும் நம்மைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களும், நம்மைப் பாதித்த விஷயங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிந்து, நம் சிந்தனையைத் தடை செய்கின்றன. இவ்வாறு ...
Comments
Post a Comment