உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள்

நம் குழந்தைகள் வாழ்வதும், வீழ்வதும் விதியின் கையிலோ, ஜோதிடத்தின் கையிலோ இல்லை. அது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது.
குழந்தை பிறந்தது முதல் நினைவு தெரியும் வரையில் அது நம்மை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. நாம் சொல்வதை அது வேதவாக்காக எடுத்துக் கொள்கிறது.

ஆனால் நம்மில் சிலரோ, இதனைப் புரிந்து கொள்ளாமல் போனை எடுக்கும் குழந்தையிடம், ‘வீட்டில் அப்பா இல்லை’ என முதல் பொய்யை சொல்லச் சொல்லி அவர்கள் நேர்மையை சிறு வயதிலேயே கொன்று விடுகிறோம்.
இன்னும் சிலர் குடி, புகை, கணவன் மனைவி சண்டை போன்ற விஷயங்களை குழந்தையின் முன்னே நிகழ்த்தி அவர்கள் ஒழுக்கத்தையும்,
 மரியாதையையும், ஏன் முன்னற்றத்தையும் கூட அழித்து விடுகிறார்கள்.
பொதுவாக குழந்தைகளை நாம் நினைக்கும் படியெல்லாம் வளர்ப்பது கடினம். நாம் நடந்து கொள்ளும் படியே அவர்கள் வளர்வார்கள் என்பது தான் உளவியல் ரீதியாக அனைவரும் கண்ட உண்மை.

நீங்கள் அடித்தால் அவர்களும் அடிப்பர், நீங்கள் படித்தால் அவர்களும் படிப்பர்.
நீங்கள் படுக்காமல் அவர்களை தூங்க வைக்க முடியாது, நீங்கள் டீவி பார்த்து கொண்டு அவர்களை படிக்க சொல்ல முடியாது.

சச்சின் டெண்டுல்கர் பலருக்கு ரோல் மாடலாக இருக்கலாம், ஆனால் அவரின் ரோல் மாடல் அவர் தந்தையே. சச்சின் மட்டும் அல்ல, உலகின் பெரும்பாலான சாதனையாளர்களிடமும் நீங்கள் இந்தப் பதிலையே கேட்க முடியும்.
மேலும் நேரில் பார்க்கும் தன் பெற்றோரையோ, ஆசிரியரையோ விட புத்தகத்திலோ திரையிலோ பார்க்கும் மனிதர்களால் பெரிதான தாக்கத்தை ஒரு குழந்தையின் மனதில் நிகழ்த்தி விடவே முடியாது.
மொத்தத்தில் நம் குழந்தைகளுக்கு நாமே சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவோம்.

ஆம்! உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள்...

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை