அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம்.. தேடித்தேடி இந்தியர்களுக்கு சிஇஓ பதவி கொடுக்க என்ன காரணம்..?!
உலகின் மாபெரும் டெக் நிறுவனங்களாகத் திகழும் பல நிறுவனத்தில் தற்போது இந்தியர்கள் உயர் பதவி வகிக்கிறார்கள். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை-யில் துவங்கி தற்போது டிவிட்டர் பராக் அகர்வால் வரையில் பல நிறுவனங்களில் அடுத்தடுத்து திட்டமிட்ட வகையில் இந்தியர்களைச் சிஇஓ-வாக நியமிக்க என்ன காரணம்..?!
உண்மையில் இது திட்டமிட்டு தான் நியமிக்கப்படுகிறார்களா அல்லது பிற நிறுவனத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்து வியந்து பிற நிறுவனங்களும் இந்தியர்களை நியமிக்கிறார்களா..? அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியர்கள் ஏன் ரொம்ப ஸ்பெஷல்..?
இந்திய பெரும் தலைகள்..
சாந்தனு நாராயண் - அடோப்
சுந்தர் பிச்சை - ஆல்பபெட்
சத்யா நாதெல்லா - மைக்ரோசாப்ட்
புனிட் ரென்ஜென் - டெலாய்ட்
அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்
விவேக் சங்கரன் - ஆல்பர்ட்சன்
வாஸ் நரசிம்மன் - நோவார்டிஸ்
அஜய் பங்கா - மாஸ்டர்கார்டு
இவான் மானுவல் மெனெஸ் - டியாஜியோ
நிராஜ் எஸ். ஷா - வேஃபேர்
சஞ்சய் மெஹ்ரோத்ரா - மைக்ரான்
ஜார்ஜ் குரியன் - NetApp
நிகேஷ் அரோரா - பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்
தினேஷ் சி. பாலிவால் - ஹர்மன் இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரீஸ்
சந்தீப் மாத்ரானி - WeWork
அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்
இப்போது டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பராக் அகர்வால். இந்த நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனத்தில் இந்தியர்கள் தலைவராக உள்ளனர். இதோடு பல பெரிய நிறுவனத்தில் இந்தியர்கள் முக்கியப் பதிவியில் இருக்கிறார்கள்.
வாய்ப்புகள்
1965 குடிவரவு மற்றும் தேசிய சட்டம் (அமெரிக்கா) சட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா-விற்குப் பலர் வேலைவாய்ப்புக்காகவும், வர்த்தக வாய்ப்புக்காகவும் சென்றனர். இக்காலக்கட்டத்தில் அமெரிக்கச் சென்ற இந்தியர்கள் மிகவும் போராடி தனக்கான இடத்தை அசைக்க முடியாத அளவில் பிடித்தனர். 1990க்குப் பின் குடிவரவு சட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் டெக்னாலஜி பிரிவில் இந்தியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொட்டிக்கொடுத்தது.
STEM கல்வி
உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளை எந்தத் துறையில் படிக்க வைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டு இருக்கையில் இந்தியாவில் STEM அதாவது Science, Technology, Engineering, and Mathematics பிரிவில் அதிகப்படியானவர் படிக்க வைத்து இன்ஜினியர்களையும், டாக்டர்களையும் உருவாக்கினர். இது 1990க்குப் பின் அமெரிக்காவில் படிப்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.
படிப்பிற்காக 1960களில் இருந்தே இந்திய பெற்றோர்கள் அதிகளவிலான முக்கியதுவம் கொடுத்த காரணத்தால் 1990க்குப் பின் உருவாக டெக் வளர்ச்சி இந்தியர்களுக்குப் பெரிய அளவில் உதவியது.
பகுப்பாய்வு மனம் & தொலைநோக்கு
100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைத்து துறையிலும் அனைத்து விஷயத்திலும் போட்டியும், கணக்கீடும் இருக்கும். இதனால் இந்தியர்களுக்குப் பொதுவாகவே பகுப்பாய்வு மனம் & தொலைநோக்கு பார்வையும் அதிகம். உதாரணமாக இன்று நீங்கள் மார்டன் அப்பா அம்மாவாக இருந்தாலும், அடுத்த 30 வருடத்திற்குப் பின் என் குழந்தை என்ன செய்யப்போகிறது.. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான கணக்கீடு இருக்கும். இது இந்தியாவில் இருக்கும் போட்டி நிறைந்த மனநிலையில் உருவான பக்குவம்.
கணக்கீடு
இதேபோல் இந்தியர்கள் மனக்கணக்கு செய்யும் திறன் எப்போதும் அதிகம். இதனால் ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் கண்ணோட்டம் மிகவும் மாறுபட்டும், தொலைநோக்கு உடனும் இருக்கும். இது தான் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குப் போடும் விதையாக இருக்கும்.
கடுமை உழைப்பு
இந்தியர்களுக்குக் கடுமையாக உழைக்க வேண்டியது வாய்ப்பு இல்லை கட்டாயம், சுதந்திரத்திற்குப் பின்பு மக்கள் தங்களுடைய தினசரி தேவையைப் பூர்த்தி செய்யவே 200 சதவீதம் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் காரணத்தால் கடுமையாக உழைக்கும் பழக்கம் இந்தியர்களின் DNAவிலேயே உள்ளது.
புதுமை
இந்தியாவும் சரி, இந்தியர்களும் சரி அமெரிக்கா பிரிட்டன் போலப் பணக்கார நாடு இல்லை. மக்களுக்கும் சரி அரசும் சரி கையில் இருக்கும் சிற தொகையாகவோ, பொருளாகவோ இருந்தாலும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என எண்ணம் இருக்கும். இதுவும் இந்தியர்களின் DNAவில் முக்கியப் பகுதி என்றால் மிகையில்லை.
பிளான்-பி
இந்தியர்களின் வளர்ச்சி குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தின் வளர்ச்சி நிலையற்றதாக இருக்கும் காரணத்தால் இந்தியர்கள் எப்போதும் பிளான்-பி கையில் இருக்கும். இது நிறுவனங்களின் முடிவுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவும். இதேபோல் எதிர்பார்க்காத அனைத்து பிரச்சனைகளையும் இந்தியர்கள் அசால்டாகக் கையாளும் திறன் கொண்டவர்கள்.
இதேபோல் எதிர்பார்க்காத அனைத்து பிரச்சனைகளையும் இந்தியர்கள் அசால்டாகக் கையாளும் திறன் கொண்டவர்கள்.
ஏன் இந்தியர்கள்
தற்போது அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ-வாக இருக்கும் அனைத்து இந்தியர்களும் இந்தியாவின் தலை சிறந்த கல்லூரியில் படித்து அதன் பின்பு அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் இருக்கும் முக்கியக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர்.
இந்தியர்களுக்கே உண்டான நேர்மை, கடுமையாக உழைக்கும் குணம், வீடு வாசல் மறந்து நிறுவனத்திற்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து உயர் படிப்பு மற்றும் பல வருட அனுபவங்கள் இருக்கும் போது ஒரு நிறுவனத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்கள் என இந்திய அமெரிக்கரான
ஜஸ்மீத் சாவ்னி கூறுகிறார்.
இந்தியர்கள்..
இதே வேளையில் முதலில் அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக உயரும் ஒருவர் செய்யும் சாதனைகளும், அவரின் நிர்வாகத்தின் மூலம் நிறுவனத்திற்குக் கிடைக்கும் வளர்ச்சி பெரும் தாக்கத்தைப் பிற நிறுவனங்கள் போட்டி நிறுவனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
இதன் அடிப்படையில் அனைத்து டெக் மற்றும் நிதி நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறையில் இந்தியர்கள் அதிகமாகத் தலைமை பொறுப்பு ஏற்று வருகிறார்.
அமெரிக்கா
இதேவேளையில் அமெரிக்காவில் நிறுவனத்தைத் துவங்கியவரே நிர்வாகம் செய்யக் கூடாது என்ற மனநிலை பெரு நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெக் துறையில் இந்தக் கண்ணோட்டம் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தியர்களுக்கு அளிக்கும் பட்சத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வளர்ச்சி
மேலும் இந்த அனைத்து காரணங்களையும் ஏற்கும் வண்ணம் இந்தியர்கள் கையில் கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் மதிப்பீடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உதாரணமாக அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் சிஇஓ-வாகப் பதவியேற்கும் போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 24-30 பில்லியன் டாலர் தான் இன்று 327 பில்லியன் டாலர், இதேபோலத் தான் ஆல்பபெட், மைக்ரோசாப்ட், மாஸ்டர்கார்டு இன்னும் பல..
Comments
Post a Comment