எதுவுமே வீண் இல்லை!
ஒரு முறை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிலத்தில் விதையை ஊன்றிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்து நண்பர் ஒருவர், ‘இந்த விதை முளைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரு வேளை முளைக்காவிட்டால்? உங்கள் உழைப்பு வீண்தானே?'' என்று கேட்டார்.
அதற்கு நம்மாழ்வார், ‘நான் விதை முளைப்பதற்காக முயற்சி செய்கிறேன். முயற்சி என்பது கூட விதை போலத் தான், முளைத்தால் மரம், இல்லையேல் அது மண்ணிற்கு உரம்! அது போல நாம் முயற்சியையும் விதைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதற்கு உண்டான பலன் நிச்சயம் ஒரு நாள் நம்மை வந்து சேரும் ''என்றார்.
இந்த உலகத்தில் முயற்சி செய்யாமல் இருப்பது தான் தோல்வியை தருகிறது. முயற்சியோ, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பாடத்தை கற்றுத் தந்து இறுதியில் நம்மை வெற்றியின் நாயகனாக மாற்றுகிறது.
அதனால் தோல்வியை கண்டு முயற்ச்சியை நிறுத்தி விடாதீர்கள். முயலுங்கள்...முயலுங்கள்.... வெற்றி ஒரு நாள் உங்களை அலங்கரிக்கும்.
Comments
Post a Comment