கடவுள் எங்கே இருக்கிறார்?

 பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் மூன்று மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.
இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.
ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும், அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.
அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.
ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம் என்றார் மேஜர்.
அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்,
"சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும், நாம் பூட்டை உடைக்கலாமே" என்றார்.
இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு, 'தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா? அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா?'
என்று குழம்பினார்.
சிறிது நேரம் கழித்து, அவர் அறிவை விட அவரின் மனம் ஜெயித்தது.
வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்.
அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.
அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாராகினார்கள்.
நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம், நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல, இது ஒரு சூழல், நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க...
மேஜர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு.., தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்...
அடுத்த மூன்று மாத காலத்தில், அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றினார்கள்.
அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.
அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை...
ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.
அதன் முதலாளியும் இருந்தார்.
ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.
எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.
அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.
அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.
ஒரு வீரர் கேட்டார், தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..? என்று.
"அப்படி சொல்லாதீர்கள் தம்பி... கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது. மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது...கடவுளிடம் கதறி அழுதேன்...
ஐயா கனவான்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.
உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
'கடவுள் இருக்கிறார்' என்பதற்கு இதை விட நான் என்ன சொல்ல...? என்று முடித்தார் அவர்.
அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.
அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.
அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.
அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.
அந்த முதியவரை தழுவிக்கொண்டு_ ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்..
இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.
நீதி:-
யாரும் யாருக்கும் கடவுளாகலாம்...
பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்...
வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்...
அன்பே கடவுள்..

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY