சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

 

  1. மனமுதிர்ச்சி : என்னுடைய வெற்றி தோல்விக்கு நானே காரணம் என்ற மனமுதிர்ச்சி. எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மேல் பழி போட்டு தப்பிக்காமை.
  2. பயிற்சி: மூளைக்கு சிறந்த பயிற்சி. நினைவாற்றல் அதிகரிக்கும்.
  3. விஷுவல் மெமரி : காட்சிகள் மூலம் ஏற்படக்கூடிய மூளைப் பதிவு திறனை அதிகப்படுத்தும்.
  4. எண்ணி துணிக ஒரு செயலை செய்வதற்கு முன், இருமுறை அல்ல பலமுறை யோசிக்கும் தன்மை.
  5. மாற்றான் வலி: எதிராளிக்கும் சம வாய்ப்பு அளிப்பது. அவருடைய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
  6. அடுத்த கட்டம் என்ன? : வீழ்ந்தாலும், எழுத்தாலும் மற்றொரு ஆட்டம் இருக்கிறது என்ற மன தைரியம்.
    அடுத்த முறை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற மன தெளிவு.
  7. கவனக்குவிப்பு : கண்களை சதுரங்க பலகையை விட்டு அகலாமல் வைத்திருப்பதால் வளரும் திறன்.
    ஈடுபாட்டுடன் படிக்கும் பழக்கம், கண்களை புத்தகத்தை விட்டு வெளியே செல்ல விடாமல் பிடித்து வைக்கும்.
  8. விழிப்புணர்வு: அழுத்தமான சூழ்நிலைகளிலும் மனதில் எச்சரிக்கையுடன் விழித்திருப்பது.
  9. தன்னம்பிக்கை: எளிதில் தோல்வியை ஏற்று சோர்ந்து போகாத தன்மை.
    அமைதியுடன் எதிர்காலத்திற்கு திட்டமிடும் பழக்கம்.
  10. மாத்தி யோசி: இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நிதானமாக மாற்று முறையில் வழி தேடுவது.
  11. சுய கட்டுப்பாடு: உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும் திறமை. முகத்திலோ, உடல் மொழியிலோ எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமை.
  12. ரிஸ்க் எடுப்பது: ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு சொல்றவங்க நிச்சயமாக சதுரங்க விளையாட்டு பிரியர்கள்.
  13. வளைந்து கொடுத்தல்: முன் வைச்ச காலைப் பின் வைக்கவும் வேண்டும்.

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.

இந்த டயலாக் எல்லாம் செஸ் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்க முடியாது.


chess Game


வாழ்ந்தாக வேண்டும் என்றால் வளைந்து ஆடத்தான் வேண்டும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY