நேரத்தை வீணடிக்காதே - Dont waste time

 கழுதைக்கும் புலிக்கும் மிகப்பெரிய வாக்குவாதம்!!

கழுதை சொல்லுச்சு புல் நீல நிறம் என்று!!

புலி சொல்லுச்சு இல்லை இல்லை பச்சை நிறம்!!



இப்படியே வாக்குவாதம் முத்தி!!

சிங்க ராசாவிடம் சென்றார்கள்!

கழுதை சொல்லுச்சு சிங்க ராசா!!

" புல்லு நிறம் நீலம், இதை புலி ஏற்று கொள்ள மாட்டிக்குது , அதானல் புலிக்கு , நீங்க தண்டனை கொடுங்க என்று சொல்லுச்சு!!


உடனே சிங்க ராசா!!

ஆமாம் ! கழுதை நீ சொல்றது சரிதான்!! புல் நீல நிறம் தான்! புலிக்கு மூன்று நாட்கள் மெளன விரதம் இருக்க ஆணை இடுகிறேன! என்று தண்டனை கொடுத்தது.

கழுதை மகிச்சி கொண்டு சென்றது.

புலி மெதுவாக மன்னா தவறு என்று தெரிந்தும் ! எனக்கு ஏன் தண்டனை கொடுத்தீர்கள்.

அதற்கு சிங்கம் சொன்னது!!

நம் எல்லாருக்கும் புல் பச்சை நிறம் என்று தெரியும்.

தெரிந்தும் உன் நிலை மறந்து கழுதையிடம் வாக்குவாதம் செய்து ,தேவை இல்லாமல் உன் நேரம் வீணடித்து என் நேரத்தையும் வீணடித்து விட்டாய் !

அதற்குத்தான் இந்த தண்டனை என்றது!! சிங்கம்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ