தர்மத்தில் பெரிய தர்மம்....
எளிமை.
தர்மத்தில் பெரிய தர்மம் சிக்கனமே அது செல்வம் சேர்க்கும்.
தவறுகளில் பெரிய தவறு தலைகனமே அது அழிவைத் தரும்.
குப்பையிலே கிடந்தால் வைரமாக இருந்தாலும் நம்ப மாட்டார்.
எளிமையாக இருப்பவர் திறமையாக இருந்தாலும் ஏற்க மாட்டார்.
வாய்த் துணிவு எல்லாம் வீரமுல்ல,
வணங்கிப் பணிபவர் எல்லாம் கோழையுமல்ல.
எளிய வாழ்வு எல்லாம் ஏழ்மையுமல்ல,
பகட்டில் வாழ்வது எல்லாம் பண்புமல்ல.
உபயோகமான பொருள்களை சேமிப்பவர் அழகாக வாழ்வார்.
இனிமையான நினைவுகளை சேகரிப்பவர் அமைதியாக வாழ்வார்.
எளிமையாக வாழ்பவரை யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.
எளிமையாக வாழாதவர்க்கு யாரையும் கண்ணுக்கு தெரிவதில்லை.
குறைவான வார்த்தைகளே நிறைவான வழிபாடு.
எளிமையான ஆடைகளே நிறைவான அலங்காரம்.
கடனுக்கு காரணம் குறைந்த வருமானமல்ல நிறைந்த செல்வமே.
நோய்க்கு காரணம் குறைந்த உணவல்ல குறைந்த ஒழுக்கமே.
எடை குறைவான பொறுள்களே இலகுவாக மிதக்கின்றன.
ஆசை குறைவான மனங்களே எளிமையாக வாழ்கின்றன.
வளமையாய் காட்சி தருபவர்கள் எல்லாம் செல்வருமல்ல.
எளிமையாய் காட்சி தருபவர்கள் எல்லாம் வறியவருமல்ல.
Comments
Post a Comment