20 - 30 வயது இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
அறிவுரையே பிடிக்காத வயதுதான். இருப்பினும் அனுபவத்தை எழுதுகிறேன்.
பட்டுப் போல எட்டு பாயிண்ட்.
சட்டுன்னு படிச்சிடுங்க :)
- தோல்வி நல்லது.
தோற்று போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். இந்த வயதில் கல்லூரியிலோ, வேலையிலோ, ஏன் குடும்ப வாழ்க்கையிலோ தோல்வி ஏற்பட்டால் உங்களுக்கு பக்கபலமாக உங்கள் குடும்பத்தினர் இருப்பார்கள். முக்கியமாக பெற்றோர்கள். ஆரம்பத்தில் திட்டினாலும், எப்படியேனும் நீங்கள் முன்னுக்கு வர கை கொடுப்பார்கள். - சுயமுன்னேற்றப் புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்குங்கள். ஆண்கள் அம்மாவிடமும், பெண்கள் அப்பாவிடமும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது பேசுங்கள். சகோதரி/சகோதரரிடமும் பேசலாம். இந்த உரையாடல் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவலாம்.
- கம்பேர் செய்யாதீர்கள். இதை கற்றுக் கொடுத்தது உங்களுடைய பெற்றோர்களாகவே இருக்கலாம். அவர்கள் பள்ளி/கல்லூரி காலத்தில் உங்களை நண்பர்களுடன் கம்பேர் செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு கோபம் வந்தது. அப்படி வேண்டாம் என்று நினைத்தீர்களே. இப்போது மட்டும் உங்களை ஏன் பிறருடன் கம்பேர் செய்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.
- எதிர்பார்த்திருங்கள். எதிர்பாராமல் நடக்கப்போகும் விஷயங்களை எதிர்பார்த்திருங்கள். 20 வயதிற்கு முன்பு வரை பள்ளியில் கல்லூரியில் 10- 20 மார்க்குக்கு சர்ப்ரைஸ் டெஸ்ட் நடந்திருக்கும். ஆனால் இனி வாழ்க்கை உங்களுக்கு வைக்கும் பாருங்கள் அத்தனையும் சர்ப்ரைஸ் டெஸ்ட் தான். விழிப்புணர்வை இன்னும் கொஞ்சம் வளர்த்துகிட்டா போதும். சட்டென எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நமக்கு இயல்பாகவே தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
- நாம் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிட தயாராகத் தான் இருக்கின்றோம் நமக்குத் தெரியாமலேயே;)) உதாரணத்திற்கு : வெளிச்சத்திற்கும், இருட்டுக்கும் கண்கள் தானாகவே தயாராவதை போல்.
- தனிமையும், அமைதியும் பழகுங்கள். சுய அலசலுக்கான நேரம் அது. எந்நேரமும் எல்லோருடனும் நான் கலகலப்பாக பேசுவேன் என்று உளறிக் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டாம்.
- நகைச்சுவையாக பேசுகிறேன் என்று நையாண்டி தனமாக பேசுவதை தவிருங்கள். உறவில் விரிசல் விழ காரணமாகக் கூடும்.
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசி பழகுங்கள் அலுவலகமோ, குடும்பமோ "பேசாத வார்த்தைக்கு நீங்கள் எஜமான். பேசிய வார்த்தை உங்களுக்கு எஜமான்". - உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். டீன் ஏஜில் பெற்றோர்களே உங்களை நன்றாக கவனித்திருப்பார்கள். இனி உடல் எனும் கருவிக்கு நீங்களே பொறுப்பு. அதற்காக ஜிம்முக்கு போய் தான் உடல்நலம் காப்பேன் என்று பெற்றோர் காசில் வேர்க்க வேண்டாம்.
- இனி நேரம் குறுகும். எல்லா விஷயங்களிலும் துரிதமாக செயல்பட பழக வேண்டும். பள்ளிக்காலம் வரை உங்களுக்கு கிடைத்த நீண்ட நேரம் இப்பொழுது சுருங்கிப் போய் இருக்கும். வளர்வதற்கு 20 வருடங்கள் எடுத்துக் கொண்ட நீங்கள் இன்னும் 10 வருடத்தில் வேலை, குடும்ப பொறுப்பு,
திருமணம், குழந்தைகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள். இனியும் சோம்பலாக காலையில் 10 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தூங்க முடியாது.
Comments
Post a Comment