Anger Is The Key To Every Evil

Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured.

-Mark Twain


பக்கத்து ஊருக்குச் செல்லும் கடைசி பரிசல் அது. அதை விட்டால் மறுநாள் காலையில் தான் பரிசல். பரிசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
பரிசல் புறப்பட தயார் ஆனது. 
தாமதமாக வந்த துறவி ஒருவர் அந்த பரிசலில் ஏறினார். 

பரிசலில் இருந்தவர்கள் "நாங்களே இங்கே நெருக்கி அமர்ந்து இருக்கிறோம். உங்களுக்கு இடமில்லை. காலையில் வாருங்கள் " என்றார்கள். 
படகோட்டியோ " துறவியாரே நீங்கள் இங்கே அமருங்கள் " என்று அவருக்கு ஒரு இடம் தந்தார். பரிசல் புறப்பட்டது.

 பயணிகள் அனைவரும் வெறுப்புடன் துறவியை பார்தனர். அவரோ கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். 
" தடிமாடு போல இருக்கிறான். உழைத்து சாப்பிட்டால் என்ன? காவி உடை அணிந்து உலகத்தை ஏமாற்றுவது ஒரு பிழைப்பா? " என்று கேலி செய்தான் ஒருவன். 
அவரோ ஏதும் பேசாமால் அமைதியாக இருந்தார். 

என்ன நடந்தாலும் அவர் எதுவும் பேசமாட்டார் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது. அவர்கள் எல்லோரும் அவரைத் தாறுமாறாக ஏசத் தொடங்கினார்கள். தன் கையில் இருந்த குச்சியால் அவரை குத்தினான் ஒருவன். அப்போதும் அவர் எதிர்ப்பை காட்டவில்லை. " இவனால் இந்த உலகத்திற்கு என்ன பயன்? இவனைத் தூக்கி ஆற்றில் போடுவோம். தண்டசோறு ஒன்று குறையும் என்றான் ஒருவன். எல்லோரும் சேர்ந்து அவரை ஆற்றில் தள்ள இழுத்தனர். அபபோது அங்கே புயல் காற்று வீசியது. மூழ்கி விடுவதைப் போல பரிசவ் தள்ளாடியது. வானில் இருந்து ஒரு குரல் " துறவியாரே இவர்களை தண்டியுங்கள் என்று சொல்லுங்கள். உங்களை துன்புறுத்திய இந்தக் கொடியவர்களை கோன்று போடுகிறேன் " என்றது. 


இதை கேட்ட பரிசலில் இருர்தவர்கள் நடுங்கினர். இன்றோடு நம் உயிர் போக போகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள். 
அப்போது தியானத்தில் இருந்து கண்விழித்த துறவி " இறைவா! அன்பே வடிவான நீரா எனக்காக இவர்களை அழிப்பேன் என்று சொல்கிறீர். அவர்கள் செயல்களால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றே நினைத்தேன். அவர்களுக்கு துன்பம் ஏதும் செய்யாதீர் " என்று வேண்டினார். 

புயல் காற்று சிறிது நேரத்தில் அடங்கியது. படகில் இருந்தவர்கள் அச்சம் நீங்கி அவரை மரியாதையுடன் பார்த்தார்கள். அவர் தியானத்தில் ஆழ்ந்தார். அவர் முன் தோன்றிய இறைவன் " கொடியவர்களை அழிக்கப் போவதாக சற்று முன் குரல் கொடுத்தது நான் அல்ல. "சாத்தான்" நீ மட்டும் கோபத்திற்கு ஆளாகி இருந்தால் சாத்தானின் வலையில் விழுந்து இருப்பாய் " என்று சொல்லி மறைந்தார்...

(கோபம் நம் சத்ரு)

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ