வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்...
1. எதுவும் நிரந்தரமில்லை.
2. சில பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் பின்வாங்குவதாலே அமைதியா இருப்பதாலோ பிரச்சினை முடிவுக்கு வராது.
3. வெறும் திறமை மட்டும் வெற்றிக்கு உதவாது. விடாமுயற்சியும் தேவை.
4. நாம் யாருடன் பயணிக்கிறமோ அதை பொருத்து தான் நம் நிம்மதி ஒரு அங்கம் இருக்கிறது.
5. தவறிபோனதையோ, இழந்ததையோ நினைத்து வருந்துவதால் மாற்றம் பிறக்காது.
6. என்ன தான் பெண் உரிமை,பெண்ணியம் பற்றி பேசினாலும் பெண்ணாக இருந்து சந்திக்கும் சில சங்கடங்களை மனசு விட்டு வெளியே சொல்ல முடியாது.சொன்னாலும் விமர்சனம் பெண்ணுக்கு மட்டுமே.
7. வெற்றிக்கு பின் விடாமுயற்சி மட்டும் இல்லை சில அவமானங்களும் நிச்சயம் உண்டு.
8. அளவுக்கு மீறிய இரக்க உணர்வு நம்மை பார்த்து இரக்கம் கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும்.
9. நேர்மை, உண்மை தரும் துணிவு வேறு எதிலும் இல்லை.
10. வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும். விமர்சனங்களுக்கு செவிமடுத்தால் ஜெயிக்க முடியாது.
Comments
Post a Comment