ஸ்மார்ட்டான நபர்களிடம் இருக்கும் தனித்தன்மைகள்! - uniqueness of smart persion
ஒரு சில நபர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக, தனித்துவமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள், தனியாக ஏதாவது பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா அல்லது இவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இப்படித் தான் இருந்தார்களா என்பது பற்றியெல்லாம் கேள்விகள் தோன்றும்.
ஸ்மார்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது கல்வி அல்லது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் நமது
பெரும்பாலும் தோன்றும். ஆனால் ஸ்மார்ட்னஸ் என்பது படிப்பு சம்பந்தப்பட்டது மற்றும் கிடையாது. அது மட்டுமின்றி புத்திசாலித்தனம் அல்லது அறிவாளித்தன்மை ஆகியவை சம்பந்தப்பட்டதும் கிடையாது. ஒரே மாதிரியானத் தன்மைகளுடன், குணங்களுடன் பிறந்த இரண்டு மனிதர்களை ஒரே மாதிரியான அளவீடுகளில் ஒப்பிட முடியாது. ஸ்மார்ட்னஸ் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மிகவும் கிரியேட்டிவ்வாக எப்படி கையாள்வது என்பதையே குறிக்கிறது. எனவே எல்லோரும் ஸ்மார்ட்டாகப் பிறக்கிறார்கள் அல்லது யாருமே அப்படி பிறப்பதில்லை, காலப்போக்கில் ஸ்மார்ட்டாக மாறலாம். ஸ்மார்ட்டாக இருக்கும் நபர்களின் தனித்தன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்
தன்னுடைய ஸ்மார்ட்னஸ் பற்றி வெளிப்படையாக பேச மாட்டார்கள்
ஸ்மார்ட்டாக இருப்பவர்களின் முதல் தனித்தன்மை தங்களுடைய ஸ்மார்ட்னஸ் வெளியே கூற மாட்டார்கள். ஆனால். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் ஸ்மார்ட்டாக மற்ற அனைவருமே கவனிக்கும்படி செய்து விடுவார்கள்/ எனவே வெளிப்படையாக நான் ஸ்மார்ட் என்று கூற வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. மக்கள் தன்னை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் சுற்றி நடக்கும் எல்லா விஷயத்திலும் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.
தனிமை விரும்பிகள்
தனிமை விரும்பிகள் பலரும் ஏதோ ஒன்று பெரிய துக்கத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவோ அல்லது பெரிதாக இழந்தவர்களாகவோ பெரும்பாலும் பார்க்கப்படுகின்றனர். ஆனால் ஸ்மார்ட்டான மக்கள் என்று வரும்பொழுது தனிமை விரும்பிகள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். எப்போதுமே மற்றவர்களை சுற்றி இருக்கும் பொழுது, சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் கவனிக்க கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே தனியாக இருக்கும் பொழுது எல்லாவற்றையும் எளிதாக கவனிக்க முடியும், அறிவை மேம்படுத்த முடியும்/ இதனாலேயே ஸ்மார்ட்டான நபர்கள் தங்களை எப்போதுமே தனிமையில் வைத்துக் கொள்கிறார்கள்.
தோல்வி என்றாலும் ரெடி
கடின உழைப்பு பல்வேறு முயற்சிகள் என்று தங்களை ஈடுபடுத்திக் கொண்டும் வெற்றியடைய முடியவில்லை என்றாலும் ஸ்மார்ட்டான நபர்கள் அதைப்பற்றி கவலை பட மாட்டார்கள். தோல்வியும் வெற்றியும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள் என்பதை நன்கு அறிந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு முறை தோல்வியடைந்த பிறகும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவே முயற்சி செய்வார்கள். அதுமட்டுமின்றி தங்களுடைய அனுபவங்கள் மற்றும் தங்களுடைய தவறுகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.
பகல் கனவு காண்பார்கள்
பகல் கனவு காண்பதை நேர விரயம் அல்லது சோம்பேறித் தனத்தின் அடையாளமாகத்தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பகல் கனவு என்பது மனதை விரும்பும் திசையில் செலுத்துவதைக் குறிக்கிறது. ஸ்மார்ட்டாக இருக்கும் நபர்கள் பலரும் தங்கள் மனம் எந்த திசையில் எல்லாம் செல்ல விரும்புகிறதோ அந்த எண்ணங்களை அதன் போக்கில் விரும்புவார்கள். இதைப் பகல் கனவு என்று இரண்டு வார்த்தைகளில் கூறிவிடலாம். உண்மையாகவே மனதைக் கட்டுப்படுத்தாமல் பகல் கனவு காண்பது சிக்கல்களைத் தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது.
யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள்
பிரச்சினையின் அளவு சிறியதோ பெரியதோ, எதுவாக இருந்தாலும் என்னால் சமாளிக்க முடியவில்லை எனக்கு உடனே உதவி தேவை என்று எந்த நபரின் உதவியை நாடாமல் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, எந்த விஷயத்திற்கும் மற்றொருவரை நம்பியோ, சார்ந்தோ இருக்க மாட்டார்கள்.
Comments
Post a Comment