REDUCE - REUSE - RECYCLE

 

புத்தர் ஒருமுறை ஒரு மடத்துக்கு போயிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது.

அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர்அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார்.

அந்த புத்த பிக்கு.. சில மாதங்கள் கழித்துமீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்த போதுஅந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம்விசாரித்துவிட்டுமுன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்என்று கேட்டார்.

அதற்கு அந்த புத்த பிக்குஎன் மெத்தைக்கு விரிப்பாக இருக்கிறது என்றார்.

முன்பிருந்த மெத்தை விரிப்பு?

என் தலையணைக்கு உறையாக இருக்கிறது

அப்போது முன்பிருந்த தலையணை உறை?

என் வாசல் மிதியாக இருக்கிறது

புத்தர்அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்து போனார்.

நாம் அறிய வேண்டிய பாடம் :

பொருட்களை ரெட்யூஸ் (Reduce ), ரீயூஸ் (Reuse), ரீசைக்கிள் (Recycle)

ஆகிய மூன்று வகையிலும் பயன்படுத்திய பிறகேநாம் அதைக் குப்பையாகக் கருத வேண்டும்இப்படியான வாழ்க்கை முறையை வாழ்வது சரியான வழிமுறை.

நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் குப்பையல்லகுப்பை என்ற நினைக்கப்படும் ஒரு பொருள்அழகு பொருளாக மாற்றப்பட்டு நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். இது ஒரு பெரிய கலையாகும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை