Decluttering தந்திரத்தை அறிந்துகொள்…
Decluttering என்பது மினிமலிசக் கொள்கையின் அக்கா தங்கை எனலாம். மினிமலிஸம் என்றால் நமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பதாகும். Decluttering என்றால் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களில் தேவையில்லாதது எது என்பதைக் கண்டறிந்து நீக்குவதாகும்.
நம் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களைச் செய்வது மட்டும் வெற்றிக்கு வித்திட்டவிடாது. நாம் செய்துவரும் தீய விஷயங்களை கைவிடுவது மூலமாகவும், வெற்றி இலக்கை அடையும் நேரத்தை அதிகப்படுத்தலாம்.
முதலில் நாம் தங்கியிருக்கும் அறை தான் நம் எண்ணங்களுகாண திறவுகோல் எனலாம். நம்மைச்சுற்றி என்ன பொருட்கள் இருக்கிறதோ அது சார்ந்த சிந்தனைகளும் செயல்களிலுமே நாம் ஈடுபடுகிறோம். உதாரணத்திற்கு எனது அறையில் டிவி, கம்ப்யூட்டர் மியூசிக் சிஸ்டம் என இவை மூன்றும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
நான் வெறுமையை உணரும் சமயங்களில் எனக்கு எதிரில் இருக்கும் இவை மூன்றின் மீதுதான் என்னுடைய கவனம் செல்ல ஆரம்பிக்கும். எதையும் செய்யாமல் பாட்டு கேட்பதால், டிவி பார்ப்பதால் எனக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் எதுவும் கிடையாது. இதுவே என்னுடைய அறையில் உள்ள டிவியை, மியூசிக் சிஸ்டத்தை வேறு அறைக்கு மாற்றிவிட்டு, ஒரு புத்தக அலமாரியை எனது அறையில் வைத்தால் நான் என்ன செய்வேன்?
நிச்சயமாக, நான் படிக்கிறேனோ இல்லையோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன்.
இது போன்று நம்மை நம் செயல்களிலிருந்து திசைத் திருப்பும் விஷயங்களை விலக்கி வைப்பது மிகவும் முக்கியம்.
எனவே உங்களுடைய இலக்கு எதன்மீது இருக்கிறதோ அது சார்ந்த பொருட்களை உங்களுடைய அறையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அச்செயலை செய்ய வேண்டுமென்று எண்ணத் தூண்டுதல் தான் தொடக்கப் புள்ளியாக அமைந்தது ஒரு ஈடுபாட்டை உங்களுக்கு ஏற்படுத்தும்.
அதைத்தாண்டி நம்மை திசை திருப்பும் விஷயங்கள் நம் அறையில் இருக்கும் பொழுது, நமக்கு இன்பத்தையே ஏற்படுத்தும் அவற்றின் மீது தான் நம் கவனமானது விரைவில் ஈர்க்கப்படும்.
இதை முயற்சி செய்து பாருங்கள்.
Comments
Post a Comment