எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

 ஒரு வணிகா் விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமான

வந்தாா். போா்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக

அவரது போா்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு விரைவில்

விமானம் ஏறினார்.


அது மூன்று பேர் அமரும் இருக்கை.ஒரு நடுத்தர வயது பெண்

ஜன்னலோரமும், நடைபாதை அருகே ஒரு சிறிய பெண்ணும்

இருந்தார்கள். அவா்கள் இருவரையும் பாா்த்து புன்னகைத்தவாறே

தனது பெட்டியை மேலே வைத்து விட்டு வடிவில் அமா்ந்தாா்.


அவா் அந்த சிறு பெண்ணை பாா்க்கும் போது தனது மகளை

நினைத்தாா். இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும்.

அமைதியாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள். அவரும் அந்த

சிறு பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு

என்ன என்று பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாா்.


அவா் மனதில் இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது

விசித்திரமாக இருந்தது.


ஆனால், தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து

வைத்து கொண்டாா். எனினும் பயணம் முழுவதும் அவள் மீது

ஒரு கண் வைக்க வேண்டும் என நினைத்தாா். அவரும்

பெண்ணை பெற்றவரல்லவா?


சுமார் ஒரு மணிநேரம் பயணத்திற்கு பின் விமானம் திடீரென

குலுங்க தொடங்கியது. பைலட் ஓலிப்பெருக்கி மூலம் பயணிகளிடம்

“நாம் கடினமான வானிலை எதிா் கொண்டிருக்கிறோம். தங்கள்

இருக்கை பெல்ட்கள் போட்டுக் கொண்டு அமைதியாக இருக்க

வேண்டும்” என்று கூறினார்.


அடுத்த அரைமணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுங்க

கடுமையான தாழ் நிலைகளும், திருப்பங்களையும் செய்து கொண்டு

சென்றது. சிலா் உயிா் பயத்தில் அழுது கொண்டிருந்தனா்.

சிலா் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனா்.


இத்தனை விசயங்கள் நடந்த போதும் அந்த சிறு பெண் அமைதியாக

இருந்தாள். அவள் கலாிங் புக், பென்சில் எல்லாத்தையும் பேக் செய்து

விட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள்.


ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது…

பைலட் “இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாக” அறிவித்தாா்.

பயணிகளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.


அவா் அந்த பெண்ணை பாா்த்து “இந்த சிறு வயதில் உனக்கு

எவ்வளவு மனதைாியம்…


பொியவா் அனைவரும் பதட்டத்துடனும், பயத்துடனும் இருக்கும்

போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய்?

என கேட்டாா்.


அந்த சிறுபெண் சிாித்து கொண்டே

” பைலட் என் தந்தை அவா் எப்படியும் என்னை கவனமாக

தரையிறக்குவாா் என எனக்கு தெரியும் அதனால் தான் நான்

பயப்பட வில்லை “என கூறினாள்.


இறைவனும் நம் தந்தை தான். எந்த சூழ்நிலையிலும் அவர் கைவிட

மாட்டார் என்று திடமாக நம்புங்கள். நல்லதே நடக்கும்.

படித்ததில் பிடித்தது

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ