ஒருவர் வாழ்வில் முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?"

 ஞானி ஒருவரிடம் ஒருவர் கேட்டார்.


"ஒருவர் வாழ்வில் முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?"


ஞானி சொன்னார்.


"அது நீங்கள் கழுதையா? எருமையா? குதிரையா? என்பதைப் பொருத்தது.


எப்படி என்றால், ஒரு தட்டு தட்டினால், கழுதை பின்னால் எட்டி உதைக்க்கும்.


எருமை அப்படியே நிற்கும்.


குதிரை பாய்ந்து ஓடும்.


அதுபோல யாராவது ஒருவர் ஒரு திட்டினால், சிலர் மீண்டும் திட்டுவார்கள்.


சிலர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும் அவமானத்திற்கும் நேர் எதிராய் செயல்படுவார்கள். குதிரையைப் போல பாய்ந்து ஓடுவார்கள்.


பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சரியாய் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. சக்தி முன்னோக்கி பாயாததால் இவர்களிடம் முன்னேற்றம் இருக்காது.


கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாயை மூடிக் கொண்டிருப்பதும் ஒன்றே. இவர்கள் வாழ்வு வெறுமையாகத்தான் இருக்கும்.


முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தன்னை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதும் ஒன்றே..


போற்றுவார் போற்றட்டும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... நம் கடமையை தொடர்ந்து செய்வோம் நம் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது...

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ