வாழ்க்கையில் துரோகங்களை எப்படி கடந்து செல்வது?

 ஒரு விவசாயி இரண்டு மாடுகளை வளர்த்தார். இரண்டு மாடுகளும்.. வயலில் உழுகவும் வேண்டும். சந்தைக்கு போக வண்டியையும் இழுக்க வேண்டும். சிலநேரம் எண்ணெய்செக்கிழும் சுற்ற வேண்டும்.


காய்ந்த வைக்கோலையும், வரப்பு ஓரத்தில் வளரும் புற்க்களையும் மட்டும் தான் உண்ண வேண்டும்.??? வேறு வழி..? இல்லவே இல்லை? சொறணை இல்லாமல், பொறுமையோடு இருந்துதான் ஆக வேண்டும்!! இப்படி ஒரு நல்ல ஜீவனுக்கு மனிதன் இட்ட பெயர்_மாடு!!


வாழ்க்கையில் கூட சில நேரம் சில மனிதர்களால்.. மனிதனுக்கு கூட இந்த நிலை வருவது உண்டு. அந்த மனிதனுக்கு உலகம் இட்ட பெயர்_முட்டாள்! பிழைக்கத் தெரியாதவன்! பாமரன்!லூசு!! என்பதாகும்.


அன்றாடம் ஒவ்வொரு நிகழ்வுகளையும், அனுபவங்களையும், துரோகங்களையும், ஒவ்வொரு விதமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது.. சில நேரம் சிரித்துக் கொண்டே, சில நேரம் அழுது கொண்டே, சில நேரம் தத்துவங்கள் பேசிக்கொண்டே, கடந்துதான் ஆகவேண்டும். வேறு வழி…?? இல்லவே இல்லை!!(இருக்கிறது)!


வேறு வழி என்று ஏதாவது இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?? அப்படி என்றால் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். துரோகங்களை கடந்து செல்வது மட்டும் அல்ல-முறியடிக்கவும் உங்களால் முடியும்!!


அலசு. ஆராயி. முடிவெடு. வென்று மீண்டு வர வழி உண்டு!! நம்பு! உன்னை மட்டுமே நம்பு!!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை