No claim bonus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

 கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும்  வாங்கப்படாமல்  இருக்கும் பட்சத்தில் 

No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.

அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி  No Claim Bonus Certificate வேண்டும் என்று   எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் . 

அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை . 

மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் . 

எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.

No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம்  .

அந்த No claim bonus ஐ புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .  

இது போன்ற  தகவல்களை எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஏஜென்டும் விளம்பரம் செய்வதில்லை.....
நமக்குத் தெரிவிப்பதுமில்லை....

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence