யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும்

 மன்னருக்கு மீன் கொண்டு வந்தான்

ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்என்றான்மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.

'முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்லஎன்று மன்னர் மறுத்தார்.

'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்என்றாள் மகாராணி.

 

மீனவன் திருப்பி அழைக்கபட்டான்கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள்அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லைஇரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியதுமீனவன் அதை தேடி எடுத்தான்மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.

'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். 'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணிஅந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறதுயாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது'.

இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற் காசுகளை கொடுத்தார்இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

கோபம் அனைத்தையும் இழந்து விடும்... குருவின் பாடம் ...!!!!!

Nothing can compete with The knowledge gained from poor, confidence