இறைவா.! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது...!
இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை. எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு.. அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
இறைவா.! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.! உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்..
Someone graduated at the age of 22, but waited 5 years before securing a good job.
Someone became a CEO at 25, and died at 50.
While another became a CEO at 50, and lived to 90 years.
Someone is still single, while someone from his school group has become grandfather.
Obama retired at 55 & Trump started at 70.
Everyone in this world works based on their time zone.
People around you might seem ahead of you & some might seem to be behind you.
But everyone is running their own race, in their own time.
Do not envy them.
They are in their time zone, and you are in yours.
So, relax.
You're not late.
You're not early.
You are very much on time.🙏
Comments
Post a Comment