மொபைல்போனில் மூழ்கிக் கிடக்கிறீர்களா? இதை செய்யுங்க, போதும்!

 

  • உங்கள் குழந்தைகளோ, அல்லது நீங்களோ, மொபைல்போன் வாயிலாக சமூக வலைதளங்களில் உலவுதல், அல்லது கேம்ஸ் விளையாடுவதை குறைக்க, இதோ எளிய டிப்ஸ். இவற்றை பின்பற்றுங்கள், நிச்சயம் மாற்றம் வரும்.
  • உங்களது மொபைல் போனில், உங்களது பொன்னான நேரத்தை கபளீகரம் செய்யும் தேவையற்ற செயலிகளை நீக்கிவிடுங்கள். அவசியமானதை மட்டுமே வைத்திருங்கள்.
  • நாம், மொபைல்போனை மறக்க நினைத்தாலும், "நோட்டிபிகேஷன்" ஒலி எழுப்பி, நம்மை சீண்டிப் பார்க்கும் எனவே, அந்த பட்டனை அணைத்து வைப்பது சிறந்தது.
  • நீங்கள் செயலிகளை பயன்படுத்தும் போது, அதற்கு அலாரம் செட் செய்து கொள்ளலாம். 10 நிமிடம் தான் உபயோகிக்க வேண்டுமென்று அலாரம் செட் செய்தால், ஒலி எழுப்பியதும் செயலியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
  • முக்கியமான குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வந்தால் மட்டுமே போனை எடுங்கள். டேட்டாவை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்காதீர்கள்.
  • சாப்பிடும்போதோ, படிக்கும் போதோ அல்லது உறங்கும் போது கூட, உங்கள் அருகில் போனை வைத்துக் கொள்ளாதீர்கள். இது உடல் நலத்துக்கும் கேடு; கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால், போனை எடுத்து பார்த்து கொண்டிருக்க தோன்றும்.
  • பொழுதுபோக்க வேறு வழி இல்லையே; அதனால் தான் மொபைல் போன் எடுக்கிறேன் என்று சாக்குபோக்கு சொல்லாதீர்கள். பொழுதை போக்க, புத்தகம் வாசிப்பு, தோட்டம் வளர்ப்பு போன்ற பிற அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ