எளிமையான வாழ்க்கையை வாழும் பிரபலம்!!!
பணம் படைத்தவர்கள் கொஞ்சம் ஆடம்பரமாதான் வாழ்வார்கள்.
(எகா) அண்ணன் முகேஷ் அம்பானி. இவருடைய மாளிகையின் மதிப்பு 5000 கோடி.
அவர் பணம் அவர் வாழுறார். முகேஷ் அம்பானிய விட பணக்காரர் ஒருவர் மிக சாதாரணமாக வாழறார்னா நம்ப முடிகிறதா? அவர்தான் பங்கு உலகின் ஜாம்பாவான் வாரன் பஃபெட்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவலின்படி, இவரது சொத்து மதிப்பு 8,600 கோடி டாலர். ஆனால், தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதத்தைத் தானமாக வழங்க உறுதி அளித்திருக்கிறார். இதுவரை தனது சொத்திலிருந்து 50% த்தை தானமாகக் கொடுத்திருக்கிறார்.
இப்போதுவரை….
· வாரன் பபெட், 1958ல் வாங்கிய வீட்டில் இன்றும் வாழ்ந்து வருகிறார். அது அவரது சொத்து மதிப்பில் 0.001% தான்.
· 50 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு ஓமாஹா நகரில் அவர் வாங்கிய 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டிலேயே இன்றளவும் வசிக்கின்றார். அவ்வீடு தன் தேவைகளனைத்தையும் பூர்த்தி செய்வதாகவே கருதுகிறார். அவ்வீட்டைச் சுற்றி முள் வேலியோ, மதில் சுவரோ எழுப்பப்படாதது குறிப்பிடத்தக்கது.
· தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனரையோ, பாதுகாவலரையோ அவருடன் கூட்டிச் செல்லாதது கவனிக்கத்தக்கது.
· மிகப் பெரிய தனியார் விமான நிலையத்தின் உரிமையாளராக இருந்தும் தன்னுடைய பயணத்திற்காக தன் விமானத்தை பயன்படுத்துவதில்லை.
· அவருடைய பெர்க்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் கீழ் 63 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
· வருடத்திற்கொருமுறை ஓவ்வொரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கும் அந்த வருடத்தில் அடைய வேண்டிய இலக்குகளைக் குறிப்பிட்டு கடிதம் எழுதுவார். அவர்களை அதிகமாக சந்திப்பதுமில்லை, தொலைபேசியில் அழைத்துப் பேசுவதுமில்லை.
· அவர் மேல்தட்டு மக்களுடன் பழகுவதை விரும்புவதில்லை. ஓய்வு நேரத்தில் தன்னுடைய இல்லத்தில் சிறிதளவு பாப் கார்ன் (Pop Corn) செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதையே மிகவும் விரும்புகிறார்.
அவர் கூறியது :
1) பணம் மனிதனைப் படைக்கவில்லை. மனிதனால் படைக்கப்பட்டதுதான் பணம்.
2) முடிந்தவரை எளிமையாக வாழப் பழகுங்கள்.
3) மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதுவும் செய்யாதீர்கள். அவர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு சரியெனத் தோன்றுவதை செயல்படுத்துங்கள்.
4) விலை மிகுந்த ஆடைகளை அணிவதை விட நீங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்திடுங்கள்.
5) அவசியமற்றவைகளுக்காக செலவிடுதலைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிடுங்கள்.
6) உங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்வதை விடுத்து உங்களுக்காக வாழுங்கள்.
(நான் படித்த தரவுகள் அடிப்படையில் கூறியிருறேன்.)
Comments
Post a Comment