உங்களுக்கு பிடித்த கோடைக்கால உணவு எது? ஏன்?

 கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். அதிலும் முக்கியமாக தயிர் கொண்டு தயாரித்த உணவு தான் பிரதானம்.

இப்பொழுதெல்லாம் தயிர் என்றாலே கடையில் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட்டில் வாங்கிக் கொள்கிறார்கள். வீட்டில் தயிர் தயாரிப்பது வழக்கொழிந்து போய்விடும் போலிருக்கிறது.

நேற்று கூட சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் 5 பாக்கெட் வாங்கி செல்கிறார். ஃப்ரிட்ஜ்-ல் ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வார்கள் போலிருக்கு. விலையோ எக்கச்சக்கம். உடலுக்கும் கெடுதல்.

பால் காய்ச்சி, உறை ஊற்றி தயிர் தயாரிப்பதில் என்ன சோம்பேறித்தனமோ அல்லது பாலில் இருந்து தயிர் தயாரிக்க முடியும் என்று தெரியாதோ:))

சரி விஷயத்துக்கு வருவோம். கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே தினமும் தயிருக்கு என தனியாக, பாலை இரண்டு நிமிடங்கள் கூடுதலாக காய்ச்சி, பதமாக ஆறிய பின் 2 அல்லது 3 பாத்திரத்தில் தனித்தனியாக உறை ஊற்றி, தோய்ந்த பின் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வேன். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வேன்.

1)மாம்பழ லஸ்ஸி.

மாம்பழ லஸ்ஸி என்றால் கொள்ளை பிரியம்.













Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை