கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!

 கால் கிலோ காஃபித்தூள்!

ஒரு உரையாடல்!

சொல்லுஎதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சாஅப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம்மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடிஅதுதான் கூப்பிட்டுட்டேன்லசொல்லு!

இப்போவாவது ஃப்ரீயாஇல்லையா?

ஃப்ரீதான் தாயேசொல்லு!

என்ன சொல்ல வந்தேன்நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன்காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

 

அடியேநான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரலதேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோஎன்னை பேச விடுங்களேன்இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்குஇதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுதுஉங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரிகேட்கறேன்சொல்லுஎன்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசலசொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடிசொல்லு!

ம்காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்கஎட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தாஇந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குதுஎதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமிஉங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமாஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

 

ஆமாஎன்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்குஉங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரிநம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்இப்போ எதுக்கு கால் பண்ணுனேஅதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்கஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதேசொல்லுஎன்ன விஷயம்?

ச்சேஇந்த நைட்டி வேற கால்ல சிக்குதுஇந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானேதொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனேஅதை சொல்லு ப்ளீஸ்இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்கநான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயேவதைக்காதேஎதுக்கு ஃபோன் பண்ணுனேசொல்லு!

அதென்னவீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மாசொல்லு!

எங்க சொல்லவிடறீங்கவீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சுஎத்தனை தடவை குறுக்கே பேசறீங்கஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

 

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்குஏன் மேல தூக்கி வெச்சீங்கஇனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரிஇனிமேல் வைக்கலசொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தாகாஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குதுகாலைல காஃபி நீங்கதானே போட்டீங்கசொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்விடுஇப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்கசரிமறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்காகாஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்தப்புதான் சாமிஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!

உங்களுக்கு எதுக்கு தொந்தரவுநீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம்நானே வாங்கிக்கறேன்நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோஹல்லோ ........

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை