தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்!!!

 1.      ஒரு செயலின் சரி/தவறு என்ற மதிப்பீடெல்லாம் இடம்பொருள்ஏவல் பொறுத்து மாறும்.

2.      உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய மாற்றங்கள் இருக்காதுவிடியலும் அஸ்தமனமும் யாருக்கும் காத்துக்கொண்டு இருப்பதில்லையே.

3.      தினம் காலையில் மணிக்கு எழுந்தால் மட்டும் போதாது11-12 மணிக்கு கொட்டாவி விடாமல் இருப்பவருக்கே செல்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்.

4.      ஒருவரை பிடிப்பதற்கான காரணம் முகமோநிறமோ மட்டுமேயல்லஅதையும் தாண்டி எண்ணம்செயல்குரல்.... நிறைய இருக்குசிலசமயம் எழுத்தும் கூட.

5.      தன்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்று வலிய முயற்சி செய்பவர்ஒரு கட்டத்தில் சலித்து போய் எல்லோரையும் உதறி சென்று விடுவார்.

6.      நம் விருப்பம் போல ஒருவரை செயல்பட வைக்கஅவர் பேசுவதை கவனித்தாலே போதும். குழந்தை பேசுவதை காது கொடுத்து கேட்டாலேநம்மை பிடித்துப்போய்நம் சொல்படி நடப்பார்கள்கணவன்/மனைவியும் தான்.

7.      வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிப்பருக்கே வெற்றி கிட்டும்நாம் என்ன ஞானியாஎன்ற எண்ணம் தோன்றலாம்குறைந்தபட்சம் தோல்வியை ஜீரணிக்கும் தெளிவு வேண்டும்மனம் சமநிலையடையும் போதே காரியத்தில் கவனம்வெற்றிக்கு வாய்ப்பு.

8.      நேர்மறை எண்ணங்களை உருவாக்க தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்வதால் குபீரென்று எழுந்து கொள்ளாதுமுதலில் மேஜையைஅறையை சுத்தம் செய்வதில் துவங்க வேண்டும்.

9.      எந்த செயலை பொழுதுபோக்க தேர்வு செய்கிறோமோஅதுவே பிற்பாடு நம் நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும்.

10.  உற்சாகமாக இருப்பவரையே அனைவரும் விரும்புவர்நம் குழந்தையே ஆனாலும் எதற்கெடுத்தாலும் அழுதால் எரிச்சல் வரத்தானே செய்யும்எதையோ பறிகொடுத்தது போல் இருப்பவரை கழட்டி விடவே நினைப்பார்கள்.

உற்சாகமாக இருங்கள். எல்லோரிடமும் இணக்கமாக இருங்கள்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ