மன உறுதியை அதிகப்படுத்த… பயத்தினுள் பாயுங்கள, வலியைக் கேளுங்கள்

 பயத்தினுள் பாயுங்கள, வலியைக் கேளுங்கள்.





உங்களுக்கு நினைவிருக்கிறதா? உடற்பயிற்சி செய்ய துவங்கிய இரண்டாவது நாள் நமது உடலில் பெரும்பாலான இடங்களில் வலியை அனுபவித்திருப்போம்.

அந்த வலி ஊசியை வைத்து குத்துவது போன்ற அல்லது எரியும் நெருப்பை தொடுவது போன்றோ தீவிரமான வலி அல்ல ஆனால் அந்த வலி நம்மை மீண்டும் உடற்பயிற்சி செய்ய விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. ஏனென்றால், அடிப்படையாகவே நமது மூளை எப்பொழுதும் நம்மை வலியிலிருந்து காப்பற்றவே நினைக்கும்.

இதன் காரணமாக தான் பெரும்பாலான நபர்கள் முதல் 5 நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் மட்டுமே அந்த வலியுடன் தொடர்கின்றனர். இதற்கு காரணம் நாம் அனுபவிக்கும் வலிகளே நம்மை வலிமையாக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதே.

இதை அறிந்திருப்பதே மிக பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. வலியுடன் தொடரும் பொழுது, சில காலம் கழிந்த பின்னர் அந்த வலி வலியாக அல்லாமல் ஒரு வித சுக அனுபவத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சியினால் வரும் வலிகள் நம்மை மேலும் உறுதி படைத்தவனாக மாற்றுகிறது.

மனதின் வலிமையும் இதே போல் தான் வேலை செய்கிறது. ஒரு விடயத்தைப் பற்றி நினைப்பது நம்முள் பயத்தை ஏற்படுத்தினாலோ, நம்மை அழுத்தத்திற்குள்ளாக்கினாலோ அதைப் பற்றி எண்ணுவதையே நாம் நிறுத்திவிடுகிறோம்.

இதிலிருக்கும் பிரச்சனை என்னவெனில் நம்மை பயப்படுத்தும் அல்லது அழுத்தத்திற்க்குள்ளாக்கும் விடயங்களே மிகவும் இன்றியமையாத விடயங்களாகும். உதாரணத்திற்கு நாம் செய்ய அஞ்சும் காரியங்களே நமக்கு மிகுந்த பயனளிக்கும்.

நம் எதிர்காலத்தில் மிக பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடிய விடயங்கள், மிக பெரும் ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் அதை கண்டு நாம் அஞ்சுகிறோம். அதைப்பற்றி எண்ணுவதையே தவிர்க்கிறோம்.

ரே டாலியோ தனது புத்தகத்தில் எழுதுகிறார்

நாம் வளர வேண்டுமெனில் நமது வரம்புகளை மீற வேண்டும். அது வலிமிக்கதாக தான் இருக்கும், ஆனால் அந்த வலியை ஏற்றுக்கொண்டால் தான் வலிமை மிக்கவனாக ஆக முடியும். இது தான் இயற்கையின் அடிப்படை விதி.

எனவே அடுத்த முறை உங்களை ஒரு விடயம் அழுத்தத்திற்குள்ளாக்கும் பொழுது, அதிலிருந்து நகர முற்படாதீர்கள், மாறாக அதனுள் பாயுங்கள். பிறகு நீங்களே விளங்கிக்கொள்வீர்கள், உங்களை பயம் கொள்ள செய்த விடயம் நீங்கள் எண்ணியளவிற்கு உங்களை பயடுத்தவில்லை என்று.

எப்பொழுது ஒரு விடயத்தை என்னும் பொழுது பயம் உண்டாகிறோதோ, பதற்றம் உண்டாகிறோதோ அந்த விடயத்தை முதலில் செய்து விடுங்கள். பிரச்னையை நேருக்கு நேராக சந்தியுங்கள், பயத்தை நேருக்கு நேராக உற்று நோக்குங்கள். இது தான் மன உறுதி பெற ஒரே வழி.

We suffer more from Imagination than in Reality — Seneca


  • பலர் கல்வி அறிவை பெறுவதன் மூலமும், நல்ல நண்பர்களை சம்பாரிப்பதன் மூலமும், மன தைரியத்தை வளர்க்கிறார்கள்.
  • சிலர் இறை நம்பிக்கை மூலமாக மன தைரியத்தை வளர்க்கிறார்கள்.

 

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை