நம் சமூகம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்ன?
1| கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்ப பொருளாதாரம் உயரும்.
- அடிக்கடி ஹோட்டல்/ரெடி மிக்ஸ் உணவு, வார இறுதி ஊர் சுற்றல்- இவற்றால் ஆடம்பர செலவு கூட அத்தியாவசியமாகி போவதால் சில குடும்பங்களில் கடனும் உயரும்.
2| முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்.
- "உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது". தனக்கு எது வருமோ, அதிலேயே பயிற்சி செய்ய வேண்டும்.
3| துணி வாங்கி தையற்காரரிடம் அளவு கொடுத்து தைப்பதை விட, ரெடிமேட் தான் சீப் அண்ட் பெஸ்ட், ஃபேஷன் & டிரெண்ட்.
- மூன்றாவது முறை துவைத்து இஸ்த்திரி செய்து அணியும் போதே, வாங்கிய கலர் இதுதானா? - சந்தேகம் வந்துவிடும்.
- ஒரே ஏரியாவில் 20 நபராவது அதே டிஸைனில் அணிந்து இருப்பார்கள். ஆடையின் தனித்தன்மை மிஸ்ஸிங்:((
4| கல்வியறிவும், பொருளாதாரமும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கும்.
- முன்னிரண்டும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மூன்றாவதாக ஆளுமைத் தன்மையே அடிமைத்தனத்தை அடித்து விரட்டும்.
Comments
Post a Comment