கோபம் அனைத்தையும் இழந்து விடும்... குருவின் பாடம் ...!!!!!
குருவின் பாடம் ...!!!!!
யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி ..!!!!
அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டு கொள்ள மாட்டார் ...!!!!
பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை ...!!!
எப்படி இவரால் இருக்க. முடிகிறது என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம் ..!!!!
தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார் ...!!!!
துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார் ..!!!
ஒரு ஏரியில் காலியான. படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம் ...!!!
அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்த போது நான் அமர்ந்திருந்த படகை முட்டியது ஒரு படகு ..!!!
என் தியானம் கலைந்தது ...
இப்படி அஜாக்கிரதையாகா படகை முட்ட விட்டது யார் என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால் அது ஒரு வெற்றுப் படகு ...
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது ..!!!
என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே ...!!!
யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும் ..!!!
இதுவும் வெற்றுப் படகு தான் என்று அமைதியாகி விடுவேன் என்றார் ...!!!!
கோபத்தின் பாதிப்பை நாம் 3 வகைகளாக பிரிக்கலாம் ..!!!
கோபம் அறிவை பாதிக்கக் கூடியது ....
கோபம் உடலை பாதிக்கக் கூடியது ...
கோபம் நடந்தையை பாதிக்கக் கூடியது ....
புரிந்ததா ரகசியம் என்றார் குரு ...!!!!
குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார் ...
கோபம் அனைத்தையும் இழந்து விடும் ...
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் நலமுடன் ...
Comments
Post a Comment